பொது செய்தி

தமிழ்நாடு

சம்பள பேச்சில் முன்னேற்றம் இல்லை!

Added : செப் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர் : ஆறாவது சுற்று பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையிலும், தீர்வு எட்டப்படவில்லை; வரும் 17ம் தேதி, ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க, ஆடை உற்பத்தியாளர் சங்கம் - தொழிற்சங்கத்தினரிடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. கடந்த ஆக. 4ம்

திருப்பூர் : ஆறாவது சுற்று பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையிலும், தீர்வு எட்டப்படவில்லை; வரும் 17ம் தேதி, ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க, ஆடை உற்பத்தியாளர் சங்கம் - தொழிற்சங்கத்தினரிடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. கடந்த ஆக. 4ம் தேதி முதல் இருதரப்பினரும் ஐந்து சுற்று பேச்சுவார்த்தை நடத்திஇருந்தனர்.தொழிற்சங்கத்தினர், 90 சதவீத சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து பேசிவருகின்றனர்.

கடந்த 3ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், 28 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்க, ஆடை உற்பத்தியாளர் சங்கத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை, ஹார்வி ரோடு சிட்கோ வளாகத்தில் உள்ள 'சைமா 'சங்க அரங்கில் நேற்று மாலை நடந்தது.பேச்சுவார்த்தை குழு தலைவர் துரைசாமி (ஏற்றுமதியாளர் சங்கம்) தலைமைவகித்தார்.

உற்பத்தியாளர் சங்கங்கள் தரப்பில், 'சைமா' சங்க தலைவர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் பொன்னுசாமி, துணை தலைவர் கோவிந்தப்பன், ஏற்றுமதியாளர் சங்க துணை தலைவர் வேலுசாமி, இணை செயலாளர் செந்தில்குமார், 'டீமா' தலைவர் முத்துரத்தினம், செயலாளர் செந்தில்வேல், 'நிட்மா' செயலாளர் ராஜாமணி, 'சிம்கா' தலைவர் விவேகானந்தன், 'டெக்மா' தலைவர் கிருஷ்ணன் ஆகியோரும், தொழிற்சங்கங்கள் தரப்பில் ஏ.ஐ.டி.யு.சி., சேகர், இசாக், சி.ஐ.டி.யு., மூர்த்தி, சம்பத், ஐ.என்.டி.யு.சி., பெருமாள், எம்.எல்.எப்., மனோகரன், பெருமாள், அண்ணா தொழிற்சங்கம் கண்ணபிரான், விஸ்வநாதன், பி.எம்.எஸ்., சந்தானகிருஷ்ணன், எல்.பி.எப்., ராமகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், பூபதி, எச்.எம்.எஸ்., முத்துசாமி, ஜெயராம் பங்கேற்றனர்.நேற்றைய பேச்சுவார்த்தையிலும், உற்பத்தியாளர் சங்கம் தரப்பினர், 28 சதவீதம் வரை மட்டுமே சம்பள உயர்வு வழங்கமுடியும்,

அதற்குமேல் உயர்வு வழங்க முடியாது என தெரிவித்தனர்.தொழிற்சங்கத்தினர், இதற்கு உடன்படவில்லை; கூடுதல் சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.இருதரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், நேற்றைய பேச்சுவார்த்தையிலும், ஒப்பந்தத்துக்கான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வரும் 17ம் தேதி, ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-202110:35:34 IST Report Abuse
kumarKVS senthil இவ்வளவு பிடிவாதம் கூடாது இதை தொழிளாலி களாகிய நாங்கள் தான் செய்ய வேண்டும்வேளை நிறுத்தம் தொடங்கும் இவை நீடித்தால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X