கேரள பிஷப் சர்ச்சை கருத்து: காங்., எதிர்ப்பு; பா.ஜ., ஆதரவு

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரள கத்தோலிக்க பிஷப் கூறிய மத ரீதியிலான கருத்து, முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்; பா.ஜ., தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.கேரளாவில் உள்ள கோட்டயத்தின் குரவிலங்காடு தேவாலயத்தை சேர்ந்த பிஷப் ஜோசப் கல்லாரங்கட், பக்தர்கள் மத்தியில் நேற்று முன் பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்தை
Christian girls,love and narcotic jihad, Catholic Bishop, Kerala

திருவனந்தபுரம்: கேரள கத்தோலிக்க பிஷப் கூறிய மத ரீதியிலான கருத்து, முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்; பா.ஜ., தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் உள்ள கோட்டயத்தின் குரவிலங்காடு தேவாலயத்தை சேர்ந்த பிஷப் ஜோசப் கல்லாரங்கட், பக்தர்கள் மத்தியில் நேற்று முன் பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

அவர் பேசியதாவது: கிறிஸ்துவ பெண்கள் குறிவைத்து காதலிக்கப்படுகின்றனர். பின், மதம் மாற்றி பயங்கரவாத குழுக்களில் சேர்க்கப்படுகின்றனர். இந்த பயங்கரவாத குழுக்களை சேர்ந்தவர்களுக்கு போதை மருந்து கும்பலுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்த காதல் மற்றும் போதை ஜிகாதில் சிக்காமல் கிறிஸ்துவ பெண்கள் தப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


பிஷப்பிற்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், காங்., மூத்த தலைவருமான சதீசன் கூறியதாவது: இந்த விவகாரம் குறித்து அனைத்து மத தலைவர்களும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் மாநிலத்தின் அமைதிக்கும், மனிதர்கள் இடையிலான நம்பிக்கைக்கும் பங்கம் ஏற்பட்டு விடும்.

குற்ற செயல் புரிவதற்கு ஜாதியோ, பாலின பேதமோ கிடையாது. மன நோயில் ஜாதி, மதம் பார்ப்பது, இன வெறிக்கு இணையானது. பிஷப் ஜோசப் கல்லாரங்கட் வரம்பு மீறி கருத்து கூறி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

கேரள பா.ஜ., தலைவர் கே.சுரேந்திரன் கூறியதாவது: பிஷப் தன் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் பேசியுள்ளார். பாரபட்சம் எதுவுமின்றி மிக கவனமாக விவாதிக்கப்பட வேண்டிய விவகாரம் இது. சில குறிப்பிட்ட ஆட்கள் விவாதம் என்று வரும்போது ஏன் பயப்படுகின்றனர். இந்த விவகாரத்தில், ஆளும் கம்யூ., கட்சியினர் இதுவரையில் கருத்து எதுவும் கூறவில்லை.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
15-செப்-202105:48:44 IST Report Abuse
NicoleThomson இந்த ஜிஹாத்துக்கு பிணமே பலி ஆயிருக்கான் நீங்க என்னடான்னா
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
12-செப்-202103:53:05 IST Report Abuse
meenakshisundaram அங்கங்கே இந்த மாதிரி உண்மை கருத்துக்களை வெளி எடுத்துக்கூறி தங்களை மக்களை விஷய ஞானம் உள்ளவர்களாக மாற்ற எல்லா மதங்களும் முயல வேண்டும் .இது ஹிந்து மதத்தில் சற்று அதிகமாகவே உள்ளது.முஸ்லீம் கிறிஸ்துவ மதங்களில் சொல்லிக்கொள்ளும் வகையில் இது வெளிப்பட வேண்டும். அமைதியான வாழ்வுக்கு இதுவும் இது மிக அத்யாவசம் என்று ஆகி விட்டது.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-202123:37:07 IST Report Abuse
Vittalanand கருப்பு பெண்களை சிவப்பு முஸ்லீம் விரும்ப மாட்டான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X