பொது செய்தி

இந்தியா

கூகுள் - ஜியோ ஸ்மார்ட் போன் வெளியீடு தீபாவளிக்கு தள்ளிவைப்பு

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 'ஜியோபோன் நெக்ஸ்ட்' ஸ்மார்ட்போன் வெளியீட்டை தீபாவளிக்கு தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.ரிலையன்ஸ் நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட் போனை தயாரிக்கிறது. இந்த ஸ்மார்ட் போன், நேற்று, விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்படும் என
JioPhone, Reliance Jio, Google

புதுடில்லி: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 'ஜியோபோன் நெக்ஸ்ட்' ஸ்மார்ட்போன் வெளியீட்டை தீபாவளிக்கு தள்ளி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஜியோபோன் நெக்ஸ்ட் என்ற ஸ்மார்ட் போனை தயாரிக்கிறது. இந்த ஸ்மார்ட் போன், நேற்று, விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன் வெளியீடு தீபாவளிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.


latest tamil news


தற்போது சோதனை முயற்சியாக, சிலரிடம் இந்த ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டு, செயல்பாட்டை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விற்பனை தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போன் அம்சங்களை மெருகேற்ற கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளதாக, ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போனில், கூகுள் அசிஸ்டென்ட், தன்னிச்சையாக உரக்கப் படிக்கும் திறன், செய்திகளை உடனுக்குடன் மொழிபெயர்த்து தரும் வசதி, மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் கேமரா உட்பட, பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
11-செப்-202111:55:59 IST Report Abuse
S. Narayanan பேப்பர் படிக்கலாம்
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
11-செப்-202108:12:01 IST Report Abuse
NicoleThomson இது எல்லாவற்றையும் விட இருசக்கர மூன்று சக்கர நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது பார்க்க முடியாதபடி ஒரு அமைப்பு வேண்டும் , இப்போதெல்லாம் மொபைலை பார்த்துக்கொண்டு வண்டி ஓட்டுவது பேஷன் ஆகி விட்டது
Rate this:
Cancel
SANKAR - ,
11-செப்-202108:06:28 IST Report Abuse
SANKAR Main reason for postponement is shortage of chip/ semiconductors and not enhancing features. In chips production Chinas share is one third of global volume and it appears China is creating artificial shortage.Not only cells but also production of many electronic goods and even car production adversely affected by this.INDIAS PRODUCTION OF CHIPS IS ALMOST NIL EVEN THOUGH WE ARE SECOND LARGEST CONSUMERS OF CELLS.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X