ஹாரி-மேகன் எதிர்காலத்தை சரியாக கணித்த அரச குடும்ப ஜோதிடர்!

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
லண்டன்: பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து முன்னதாக ஹாரி மேகன் தம்பதியர் பிரிந்து அமெரிக்காவில் குடியேறினர். இதனை முன்னரே கணித்த அரச குடும்பத்து பெண் ஜோதிடர் டெப்பி ஃபிராங் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறார்.ஜோதிடர் டெப்பி ஃபிராங் பிரிட்டன் இளவரசி டயானாவின் ஆஸ்தான பெண் ஜோதிடராக விளங்கியவர் ஆவார். ஜோதிடத்தின்மீது நம்பிக்கை கொண்ட டயானா அவ்வப்போது
Princess Diana, astrologer, Harry and Meghan, UK

லண்டன்: பிரிட்டன் அரச குடும்பத்திலிருந்து முன்னதாக ஹாரி மேகன் தம்பதியர் பிரிந்து அமெரிக்காவில் குடியேறினர். இதனை முன்னரே கணித்த அரச குடும்பத்து பெண் ஜோதிடர் டெப்பி ஃபிராங் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறார்.

ஜோதிடர் டெப்பி ஃபிராங் பிரிட்டன் இளவரசி டயானாவின் ஆஸ்தான பெண் ஜோதிடராக விளங்கியவர் ஆவார். ஜோதிடத்தின்மீது நம்பிக்கை கொண்ட டயானா அவ்வப்போது இவரிடம் ஆருடம் கேட்பது வழக்கம்.

அரச குடும்பம் தொடர்பான பல்வேறு விஷயங்களை டெப்பி ஃபிராங் சரியாக கணித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு டெப்பி ஃபிராங், ஹாரி-மேகன் ஆகிய இருவரும் அரச குடும்ப பதவிகளை துறந்து வேறு நாட்டில் குடியேறுவார்கள் என்று சரியாக கணித்து உள்ளார்.


latest tamil newsமேலும் மேகன் மார்க்கல் அரச குடும்பத்துடன் இணக்கமாக இருக்க மாட்டார் என்று தெரிவித்திருந்தார். அதேபோல கறுப்பினத்தைச் சேர்ந்த அமெரிக்க நடிகை மேகன் மார்கல், பக்கிங்ஹாம் அரண்மனையில் தன்மீது இனப் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டி கணவருடன் அரச குடும்பத்திலிருந்து பிரிந்து அமெரிக்காவில் குடியேறினார்.

கடந்த ஆண்டு இந்த நிகழ்வு அரச குடும்பத்தின்மீது இனப்பாகுபாடு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் மேகனின் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தனர்.

இதேபோல பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற பல விஷயங்களை டெப்பி ஃபிராங் முன்னர் சரியாக கணித்திருந்தார். கிரக பலன்களை கூறும் அவர் இளவரசி டயானா, மேகன், கேட் மிடில்டன் ஆகியோரது கிரக பலன்களை சரியாக கணித்து அவர்களது எதிர்காலம் குறித்து தெரிவித்திருந்தார்.

ஹாரி, மேகன் ஆகியோரது அரச குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் எதிர்காலத்தில் அவர்கள் அமெரிக்காவில் சிறந்த முறையில் வளமாக வாழ்வார்கள் என்று டெப்பி ஃபிராங் தற்போது தெரிவித்துள்ளார். இது டிவிட்டரில் வைரல் ஆகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
11-செப்-202118:14:31 IST Report Abuse
DVRR இதைத்தான் விளம்பர யுக்தி என்பது ??இப்போ பார்க்கணுமே இவள் வீட்டில் அதிகமான பேர் வந்து எனக்கு எனக்கு என்று நிற்பார்கள்???ஒரு சாதாரண பகுத்தறிபவனுக்கு தெரியுமே கருப்பன் இனத்தவர் பெண் அவன் வெள்ளை அரசு இனத்தவன்??? ?கறுப்பர் இனத்தில் மருமகளா அதை எப்படி இங்கிலாந்து அரச பரம்பரை ஆதரிக்கும்??? இதற்கு ஜாதகம் ஜோசியம் எண் கணிதம் ஒன்றும் தேவையில்லை????
Rate this:
Cancel
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
11-செப்-202116:15:17 IST Report Abuse
THINAKAREN KARAMANI ஜோதிடத்தை துல்லியமாக கணிப்பவராது சொற்கள் கட்டாயம் பலிக்கும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
11-செப்-202115:52:18 IST Report Abuse
Raj தமிழகத்தில் கூட ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று நிறைய ஜோதிடர்கள் கூறினார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X