பொது செய்தி

இந்தியா

கோவிட்டில் இருந்து 3.23 கோடி பேர் நலம்

Updated : செப் 17, 2021 | Added : செப் 11, 2021
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3.23 கோடியாக அதிகரித்து உள்ளது.இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே, 32 லட்சத்து, 8,330 ஆனது.ஒரே நாளில் 32,198 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3.23 கோடியாக அதிகரித்து உள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே, 32 லட்சத்து, 8,330 ஆனது.

ஒரே நாளில் 32,198 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே, 23 லட்சத்து, 74 ஆயிரத்து, 497 ஆக உயர்ந்தது. தற்போது 3.91 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 308 பேர் பலியானதை அடுத்து, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,42,317 ஆனது.


latest tamil news


நேற்று கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களில் கேரளாவில் மட்டும் 25,010 பேர் பாதிக்கப்பட்டனர். 177 பேர் உயிரிழந்துள்ளனர்.


பரிசோதனை


நேற்று மட்டும் 15,92,135 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை நடந்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 54,01,96,989 ஆனது.


தடுப்பூசி


இந்தியாவில் இன்று (செப்டம்பர் 11) காலை 8 மணி நிலவரப்படி 73,05,89,688 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 65,27,175 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X