பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் சொத்துக்களும் மீட்கப்படுகிறது: முதல்வர்

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் கோயில் நிலங்கள் மட்டுமல்ல; கோயில் சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகிறது,'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் 12 ஆயிரத்து 959 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சட்டசபை மானியக் கோரிக்கையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அதன்படி அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார், பூசாரிகளுக்கு
கோயில், பணியாளர்கள், மாத ஊக்கத்தொகை, ஸ்டாலின், துவக்கம், KOIL, WORKER, MONTHLI, PAYMENT, STALIN, START,

சென்னை: ‛‛தமிழகத்தில் கோயில் நிலங்கள் மட்டுமல்ல; கோயில் சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகிறது,'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் பணிபுரியும் 12 ஆயிரத்து 959 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சட்டசபை மானியக் கோரிக்கையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அதன்படி அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார், பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.4,000 வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து பேசியதாவது:


latest tamil news



தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை தற்போது 24 மணி நேரமும் செயல்படும் துறையாக உள்ளது. கோயில் நிலங்கள் மட்டுமல்ல; கோயில் சொத்துக்களும் மீட்கப்பட்டு வருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் 170 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார்.


latest tamil news


அதன்படி, தற்போது உதவித்தொகை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 13 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். ஆனால், இந்த திட்டத்தின் மூலம் 13 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவர் என்பதால் இதை செலவு என்று சொல்லமாட்டேன்.


latest tamil news




ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார். மேலும் பல திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
11-செப்-202122:49:35 IST Report Abuse
Aarkay கிறிஸ்துமஸ் ஊர்வலங்களை நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என காண ஒவ்வொரு இந்துவும் ஆவலாய் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
11-செப்-202120:42:33 IST Report Abuse
Vena Suna கிறிஸ்துவ கூட்டம் ஏன் இந்து கோவில்களில் இப்படி ஆர்வம் காட்டுகிறது?
Rate this:
Cancel
Radhakrishnan - Marthandam, Nagercoil,இந்தியா
11-செப்-202120:35:30 IST Report Abuse
Radhakrishnan தலைவரே ஏன் ஹிந்துக்கள் மீது இவ்வோளவு அன்பு. உங்களுக்கு வோட்டை போட்ட கிறிஸ்துவர்கள் மட்டும் முஸ்லிம்கள் கோபிக்க மாட்டார்களா. இப்படியே எல்லாரும் கொஞ்சம் கொளுத்தி போடுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X