பொது செய்தி

தமிழ்நாடு

புலம்பெயர் தொழிலாளருக்கு 'ரேஷன் திட்ட' விழிப்புணர்வு

Added : செப் 11, 2021
Share
Advertisement
சென்னை: 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தில் பயன்பெறுமாறு, உணவு வழங்கல் துறை அதிகாரிகள், வடமாநில தொழிலாளர்களை தேடிச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மத்திய அரசின், 'ஒரே நாடு - ஒரே ரேஷன்' திட்டம் அமலில் உள்ளதால், ரேஷன் கார்டுதாரர் எந்த மாநிலத்தில் இருந்தாலும், இருக்கும் இடத்திலேயே ரேஷன் பொருள் பெற்றுக்கொள்ள முடியும்.இதற்காக ஐந்து சதவீதம் கூடுதலாக, ரேஷன்

சென்னை: 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தில் பயன்பெறுமாறு, உணவு வழங்கல் துறை அதிகாரிகள், வடமாநில தொழிலாளர்களை தேடிச்சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மத்திய அரசின், 'ஒரே நாடு - ஒரே ரேஷன்' திட்டம் அமலில் உள்ளதால், ரேஷன் கார்டுதாரர் எந்த மாநிலத்தில் இருந்தாலும், இருக்கும் இடத்திலேயே ரேஷன் பொருள் பெற்றுக்கொள்ள முடியும்.இதற்காக ஐந்து சதவீதம் கூடுதலாக, ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் ஒதுக்கப்படுகின்றன. எந்தவொரு மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அங்கு பெற்ற ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டை காட்டி, பொருட்களை பெறலாம்.

ரேஷன் கடையில், அரிசி கிலோ மூன்று ரூபாய்க்கும், கோதுமை, இரண்டு ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.உணவுப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் கூறுகையில்,'புலம்பெயர் தொழிலாளர் பணிபுரியும் மற்றும் வசிக்கும் இடத்தில், இதுதொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர் துறையிடம் பட்டியலை பெற்று, இவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று, ரேஷன் பொருள் வாங்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குடும்பமாக வசிப்பவர் மட்டுமல்ல; தனிநபர்களும் ஆதார் கார்டை பயன்படுத்தி, அரிசி, கோதுமை வாங்கலாம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X