பொது செய்தி

தமிழ்நாடு

மின் கட்டணத்தை செலுத்தாமல் அடம் பிடிக்கும் குடிநீர் வாரியம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
சென்னை: மின் கட்டணம் செலுத்துவதில், அலட்சியம் காட்டி வந்த உள்ளாட்சி அமைப்புகளின் நிலுவை தொகை தற்போது, 1,072 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆனால், குடிநீர் வாரியம் அடம் பிடிப்பதால், நிலுவைத் தொகை 1,651 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.தமிழக மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை, குறித்த காலத்திற்குள் செலுத்த வேண்டும். இல்லையேல், மின் வினியோகம் துண்டிக்கப்படும்.அரசு
மின் கட்டணத்தை செலுத்தாமல்  அடம் பிடிக்கும் குடிநீர் வாரியம்

சென்னை: மின் கட்டணம் செலுத்துவதில், அலட்சியம் காட்டி வந்த உள்ளாட்சி அமைப்புகளின் நிலுவை தொகை தற்போது, 1,072 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆனால், குடிநீர் வாரியம் அடம் பிடிப்பதால், நிலுவைத் தொகை 1,651 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

தமிழக மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை, குறித்த காலத்திற்குள் செலுத்த வேண்டும். இல்லையேல், மின் வினியோகம் துண்டிக்கப்படும்.அரசு துறை நிறுவனங்களை தவிர, மற்ற பிரிவினர் குறித்த காலத்தில் கட்டணத்தை செலுத்துகின்றனர். அரசு துறையில், உள்ளாட்சி அமைப்புகளும், குடிநீர் வாரியமும், கட்டணம் செலுத்தாமல் அலட்சியம் காட்டி வந்தன. பாக்கி எவ்வளவுநடப்பாண்டு ஜூன் நிலவரப்படி, உள்ளாட்சி அமைப்புகள் 1,250 கோடி ரூபாய் மின் கட்டணம் நிலுவை வைத்திருந்தன. மேலும், குடிநீர் வாரியம் 1,500 கோடி ரூபாயும்; மற்ற அனைத்து அரசு துறைகளும் சேர்த்து 150 கோடி ரூபாய் நிலுவை வைத்திருந்தன.

மத்திய அரசு, மின் கட்டணம் செலுத்தாமல் உள்ள அரசு துறைகளில், மின் வினியோகத்தை துண்டிக்க உத்தரவிட்டுள்ளது. இதை தெரிவித்து, விரைந்து கட்டணம் செலுத்த கோரி, அரசு துறைகளுக்கு தமிழக மின் வாரியம் கடிதம் எழுதி வருகிறது. இதனால், உள்ளாட்சிகள், மின் கட்டண நிலுவையை செலுத்த முனைப்பு காட்டி வருகின்றன. தற்போதைய நிலவரப்படி, ஊராட்சிகளின் நிலுவை 550 கோடி; மாநகராட்சிகள் 290 கோடி; நகராட்சிகள் 185 கோடி; பேரூராட்சிகள் 47 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.

வாரியம் அடம்

உள்ளாட்சிகளின் மொத்த நிலுவை தொகை 1,072 கோடி ரூபாயாகவும்; அரசு துறைகளின் நிலுவை 113 கோடி ரூபாயாகவும் குறைந்துள்ளது. அதேசமயம், குடிநீர் வாரியம், மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை செலுத்தினாலும், நிலுவை 1,651 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த பாக்கியை வசூலிக்க, மின் வாரியம் பகீரத முயற்சி மேற்கொண்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X