மணப்பாறை அருகே கோயில் சன்னதியில் மர்ம துப்பாக்கி: போலீஸ் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணப்பாறை அருகே கோயில் சன்னதியில் மர்ம துப்பாக்கி: போலீஸ் விசாரணை

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021
Share
திருச்சி: மணப்பாறை அருகே, கோயில் சன்னதியில் வைக்கப்பட்ட துப்பாக்கியை, போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆளிப்படியில் உள்ள மாரியம்மன் கோவிலில், நேற்று இரவு வழிபாடு முடிந்து, பூட்டி விட்டுச் சென்றனர். இன்று அதிகாலை, வழக்கமான பூஜைகள் செய்வதற்காக, கோவிலை திறந்துள்ளனர். அப்போது, கோவில் சன்னதி முன் துப்பாக்கியும் அதற்கான உறையும்
கோயில், துப்பாக்கி, மணப்பாறை

திருச்சி: மணப்பாறை அருகே, கோயில் சன்னதியில் வைக்கப்பட்ட துப்பாக்கியை, போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆளிப்படியில் உள்ள மாரியம்மன் கோவிலில், நேற்று இரவு வழிபாடு முடிந்து, பூட்டி விட்டுச் சென்றனர். இன்று அதிகாலை, வழக்கமான பூஜைகள் செய்வதற்காக, கோவிலை திறந்துள்ளனர். அப்போது, கோவில் சன்னதி முன் துப்பாக்கியும் அதற்கான உறையும் வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து, உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


latest tamil news


சம்பந்தப்பட்ட கோவிலுக்கு வந்த போலீசார்,அந்தத் துப்பாக்கியையும், உறையையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மிகவும் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்த அந்தத் துப்பாக்கியை, வெளி மாநிலத்தில் இருந்து வாங்கி இருக்கலாம், என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், தனிநபர் பயன்பாட்டில் இருந்த துப்பாக்கியா? அல்லது தேச விரோத கும்பல் பயன்படுத்திய துப்பாக்கியா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X