''நான் ஒரு காஷ்மீர் பண்டிட்'': ஜம்முவில் ராகுல் முழக்கம்

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (61) | |
Advertisement
ஜம்மு: ஜம்மு -காஷ்மீர் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ‛‛நான் ஒரு காஷ்மீர் பண்டிட்,'' என்று கூறி அனைத்து கட்சியினரையும் திரும்ப பார்க்க வைத்திருக்கிறார் என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது பிரிவு 2019 ரத்து செய்யப்பட்ட பின்னர், ஜம்மு -காஷ்மீருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்
KASHMIR, PANDIT, CONGRESS, RAGUL, SPEACH, நான், காஷ்மீர் பண்டிட், ராகுல், பேச்சு

ஜம்மு: ஜம்மு -காஷ்மீர் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், ‛‛நான் ஒரு காஷ்மீர் பண்டிட்,'' என்று கூறி அனைத்து கட்சியினரையும் திரும்ப பார்க்க வைத்திருக்கிறார் என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது பிரிவு 2019 ரத்து செய்யப்பட்ட பின்னர், ஜம்மு -காஷ்மீருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் இரண்டாவது முறையாக பயணம் மேற்கொண்டார்.ஜம்முவுக்கு வந்த அவர் கட்ராவிலிருந்து வைஷ்ணவி தேவி சன்னதிக்கு யாத்திரையாகச் சென்றார்.

யாத்திரிகர்களுடன் 14 கி.மீ., தூரத்திற்கு பக்தர்களுடன் சேர்ந்து ராகுல் பாதயாத்திரையாக நடந்து சென்றார். அப்போது காங்கிரஸ் கட்சியினர் கட்சிக் கொடிகளை ஏந்தி பாதையில் அணிவகுத்து நின்றனர். பின்னர் ஜம்முவில் நடந்த கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

மேடையில் இருந்தவாறு, 'ஜெய் மாதா தி' என்று கோஷமிட்டு காஷ்மீர் பண்டிட் பரம்பரையை அழைத்தார். காங்கிரஸ் தொண்டர்களிடம் இந்த கோஷத்தை திரும்பச் சொல்லுமாறு கேட்டுக்கொண்ட பின் ராகுல் பேசியதாவது:


latest tamil news


நான் வைஷ்ணவி தேவியிடம் பிரார்த்தனை செய்ய வந்துள்ளேன். நான் இங்கு எந்த அரசியல் கருத்துக்களையும் கூற விரும்பவில்லை. நான் ஒரு காஷ்மீர் பண்டிட். என் குடும்பம் காஷ்மீர் பண்டிட். காஷ்மீர் பண்டிதர்களின் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்தனர். காங்கிரஸ் அவர்களுக்காக பல நலத்திட்டங்களை அமல்படுத்தியது. ஆனால் பா.ஜ., ஒன்றும் செய்யவில்லை. நான் அவர்களுக்காக ஏதாவது செய்வேன். இவ்வாறு ராகுல் பேசினார்.

இதற்கு ஜம்மு -காஷ்மீர் பா.ஜ., தரப்பில் கண்டனம் தெரிவித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: காஷ்மீர் பண்டிதர்களின் துயரங்கள் காங்கிரஸ் மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளின் 'திருப்தி அரசியல்' என்பதை ராகுல் மிகவும் வசதியாக மறந்துவிட்டார்.

காங்கிரஸ் தனது வாக்குக்காக காஷ்மீர் பண்டிதர்களை மட்டுமல்ல, காஷ்மீரின் வளர்ச்சியையும் தியாகம் செய்தது. ஜம்மு -காஷ்மீரின் பிரச்சினைகள் நேரு குடும்பத்தால் ஏற்பட்டது. காஷ்மீர் பிரச்சனைகளுக்கு ஜவஹர்லால் நேரு தான் காரணம். ராகுல் செயல்பாடு முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது.இவ்வாறு கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-செப்-202107:25:40 IST Report Abuse
ஆரூர் ரங் BANDIT? 😃சரிதான். ஒப்புதல் வாக்குமூலம்
Rate this:
Cancel
12-செப்-202107:25:27 IST Report Abuse
ஆரூர் ரங் BANDIT? 😃சரிதான். ஒப்புதல் வாக்குமூலம்
Rate this:
Cancel
12-செப்-202107:19:15 IST Report Abuse
ravi chandran முடியலே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X