சேலம்: வியாபாரியிடம் ஆன்லைன் மூலம், 7 லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில், இரு பெண்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், அழகாபுரம் நரசோதிப்பட்டியை சேர்ந்தவர் நவீன்குமார், 42. உணவு தானியம், ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்கிறார். இவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு, 2020 டிச., 8ல் தொடர்பு கொண்ட மர்ம பெண்கள், தனியார் நிறுவன கோதுமை மாவு வினியோகஸ்தர் உரிமை தருவதாக கூறி, அதற்கான முதலீடு தொகையை செலுத்த அறிவுறுத்தினர். அதை நம்பி, நவீன்குமார் ஏழு லட்சம் ரூபாய் செலுத்தினார்.
ஆனால், வினியோகஸ்தர் உரிமத்தையோ, பணத்தையோ தரவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நவீன்குமார், கடந்த, 8ல் அளித்த புகாரால் சேலம் மாநகர சைபர் கிரைம் குற்றப்பிரிவினர் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்தனர். மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவை சேர்ந்த கவிதா, இங்கிலாந்தை சேர்ந்த விஜயா ஆகியோர் மோசடி செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE