சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 குழந்தைகள் பலியான சோகம்: தந்தை விஷம் குடித்து தற்கொலை

Added : செப் 11, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஆம்பூர்: ஆம்பூர் அருகே, 2 குழந்தைகள் பலியான சோகத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கள்ளூரை சேர்ந்தவர் லோகேஸ்வரன், 45. மனைவி மீனாட்சி, 40. 4 ம் வகுப்பு படிக்கும் மகன் ஐஸ்வந்த், 2 ம் வகுப்பு படிக்கும் மகள் ஹரி பிரீத்தா ஆகியோர் உள்ளனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே கடம்பூரில்உள்ள மாமியார் வீட்டுக்கு விநாயகர்
2 குழந்தைகள் பலியான சோகம்: தந்தை விஷம் குடித்து தற்கொலை

ஆம்பூர்: ஆம்பூர் அருகே, 2 குழந்தைகள் பலியான சோகத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கள்ளூரை சேர்ந்தவர் லோகேஸ்வரன், 45. மனைவி மீனாட்சி, 40. 4 ம் வகுப்பு படிக்கும் மகன் ஐஸ்வந்த், 2 ம் வகுப்பு படிக்கும் மகள் ஹரி பிரீத்தா ஆகியோர் உள்ளனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே கடம்பூரில்உள்ள மாமியார் வீட்டுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட வந்தார். நேற்று மதியம் 2:00 மணிக்கு ஆம்பூர் அருகே கைலாசகிரி மலைக்கு லோகேஸ்வரன், மனைவி, குழந்தைகளோடு சென்றார். குழந்தைகள் இருவரும் குளத்தில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் லோகேஸ்வரனும், மீனாட்சியும் மாறி மாறி மொபைலில் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடிரென அவர்கள் நீரில் மூழ்கினர். ஆம்பூர் தீயணைக்கும் துறையினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி இருவரின் உயிர் அற்ற உடலை மீட்டனர். தாய், தந்தை கண் எதிரில் இரு குழந்தைகளும் இறந்ததை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு உடல்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் லோகேஸ்வரனும், அவர் மனைவி மீனாட்சியும் இன்று காலை ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த லோகேஸ்வரனை 108 ஆம்புலன்சில் ஏற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு லோகேஸ்வரன் இறந்தார்.இது குறித்து லோகேஸ்வரன் மனைவி மீனாட்சியிடம் ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரிடம் மீனாட்சி கூறியது: 2 குழந்தைகள் இறந்ததால் இனி நாம் மட்டும் ஏன் உயிர் வாழ்வது தற்கொலை செய்து கொள்ளலாம் என நானும், கணவரும் முடிவு செய்தோம். இதற்காக குளிர் பானம் வாங்கி அதில் விஷம் கலந்து குடிக்க ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றோம்.முதலில் கணவர் லோகேஸ்வரன் குடித்தார். பிறகு மனைவிக்கு கொடுத்த போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை மனைவி கையில் வைத்திருந்த விஷம் கலந்த குளிர் பான பாட்டிலை தட்டி விட்டார். அப்போது ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்டதற்கு, பிரேத பரிசோதனை செய்த பிறகு இரண்டு குழந்தைகள் உடல்கள் வரும். அதையும், எனது உடலையும் தகனம் செய்து விட்டு நீயும் தற்கொலை செய்து கொள்ளவும்.நாம் எல்லாம் மேல் உலகத்தில் சந்திக்கலாம் என்று கூறியபடி மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன்.இங்கு அவர் இறந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
13-செப்-202117:07:44 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும். பாசம் என்றல் என்ன என்று மக்களுக்கு சொல்லி சென்றுள்ளார்
Rate this:
Cancel
INDIAN - madurai,இந்தியா
13-செப்-202114:10:28 IST Report Abuse
INDIAN RIP
Rate this:
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
13-செப்-202103:52:46 IST Report Abuse
Sathish இதுமாதிரி இன்னும் பல சம்பவங்கள் நடந்தாலும் நமக்கு நடக்கவில்லை அதனால் நாம் இப்படித்தான் இருப்போம் என்று மாறாமல் ஆபத்து இடங்களில் சென்று மொபைலில் செல்பி எடுப்பதும் வீடியோ எடுத்தும் நாசமா போவானுங்க நம்ம ஆளுங்க. புத்தியிருந்தால் பிழைத்துக்கொள்ளட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X