பொது செய்தி

தமிழ்நாடு

முதுமலையில் யானைகள் சவாரி தற்காலிகமாக நிறுத்தம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
கூடலூர்: தமிழகத்தில் கொரோனா காரணமாக, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான யானை சாவாரி நிறுத்தப்பட்டது. இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்., 20 ல் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டு வாகன சாவரி உள்ளிட்ட சுற்றுலா பணிகள் நிறுத்தப்பட்டு, விடுதிகளும் மூடப்பட்டது. தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து 3ம் தேதி முதுமலை


கூடலூர்: தமிழகத்தில் கொரோனா காரணமாக, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான யானை சாவாரி நிறுத்தப்பட்டது.
இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்., 20 ல் முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டு வாகன சாவரி உள்ளிட்ட சுற்றுலா பணிகள் நிறுத்தப்பட்டு, விடுதிகளும் மூடப்பட்டது. தமிழக அரசின் உத்தரவை தொடர்ந்து 3ம் தேதி முதுமலை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரி தூவப்பட்டது. தொடர்ந்து, ஒன்றரை ஆண்டுகள் இடைவெளிக்கு பின், 5ம் தேதி முதல் யானை சவாரியும் தூங்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து, கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக, சுற்றுலா பயணிகளுக்கான யானை சவாரியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.'வளர்ப்பு யானைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கான வாகன சவாரி வழக்கம் போல தொடரும்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X