பொது செய்தி

இந்தியா

சபரிமலை கோயில் நடை செப்.16ல் திறப்பு

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். வருகிற 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 15ம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற புத்தரிசி
SABARIMALAI, KOVI, OPEN, சபரிமலை, கோவில், செப்16ல், நடைதிறப்பு

திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். வருகிற 21ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும்.

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 15ம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற புத்தரிசி பூஜை மற்றும் திருவோண சிறப்பு பூஜையில், நாள்தோறும் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிறைவு நாளில், படி பூஜை, புஷ்பாபிஷேகத்துடன் கடந்த 23ம் தேதி நடை அடைக்கப்பட்டது.


புரட்டாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில், வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தினமும் அதிகாலையில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜை நடத்தப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். இரவு 8.30க்கு நடை அடைக்கப்படும். 21ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சபரிமலை கோயில் திறந்திருக்கும். கோவிட் பரவல் காரணமாக, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய முடியும். ஒருநாளைக்கு 15 ஆயிரம் பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். கோவிட் நெகடிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழ் கொண்டுவரவேண்டியது அவசியம்.

latest tamil news



தொடர்ந்து புரட்டாசி மாத பூஜைக்காக கோயில் நடை வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். நாள்தோறும் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதையொட்டி, சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். நிலக்கல்லில் இதுதொடர்பான ஆய்வு நடைபெறும். 17ம் தேதி முதல் முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் 21ம் தேதி இரவு நடை அடைக்கப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11-செப்-202113:51:26 IST Report Abuse
A.George Alphonse கோரோனோ தொற்றால் சீரழிந்து கொண்டு இருக்கும் இந்த மாநிலம் இதுபோன்ற பக்தி மார்க்கத்தால் நமது நாட்டயே ஒரு வழி பண்ணணாமல் விட மாட்டார்கள் போலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X