பொது செய்தி

இந்தியா

கேரளாவில் பல்கலை., பாடத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் வரலாறு

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கண்ணூர் பல்கலை பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாயா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டு இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.கேரள மாநிலம் கண்ணூர் பல்கலையில் முதுகலை பட்டப் படிப்பிற்கான 3வது செமஸ்டர் பாடத் திட்டத்தில் புதிதாகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும்
கேரளாவில் பல்கலை., பாடத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் வரலாறு

திருவனந்தபுரம்: கண்ணூர் பல்கலை பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வால்கர், தீனதயாள் உபாத்தியாயா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டு இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் பல்கலையில் முதுகலை பட்டப் படிப்பிற்கான 3வது செமஸ்டர் பாடத் திட்டத்தில் புதிதாகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. அதில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்துத்துவ சிந்தனையாளர்களான கோல்வால்கர், சாவர்க்கர் மற்றும் தீனதயாள் உபாத்தியாயா ஆகியோரைப் பற்றி பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் படிப்பு தலசேரியில் உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் கற்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவர் சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

கேரள மாணவர் சங்கம், காங்கிரஸ் மாணவர் பிரிவு, முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் பிரிவு ஆகியோர் இது காவிமயமாக்கலுக்கான முயற்சி எனக்கூறி, பாடத்திட்டத் தாள்களை நகலெடுத்து, அவற்றை எரித்தனர். காவிமயமாக்கல் குற்றச்சாட்டுக்கு, பல்கலைக்கழகத் துணைவேந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇதுகுறித்துத் துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் கூறும்போது, 'அரசியல் சிந்தனைகள் மற்றும் வரலாற்றைப் படிக்கும்போது அதன் அனைத்துப் பக்கங்களும் விவாதிக்கப்பட வேண்டும். எனினும் இதுகுறித்து வெளியான தகவலின்படி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பதா, வேண்டாமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்' என்றார்.

இந்நிலையில், மாநில அரசு இதுகுறித்துப் பல்கலைக்கழகத்திடம் இருந்து அறிக்கை கோரியுள்ளது. அதேபோலப் பாடத்திட்டத்தை ஆய்வு செய்ய, கேரளப் பல்கலைக்கழக முன்னாள் சார்பு துணைவேந்தர் பிரபாஷ் தலைமையில் இரு நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
11-செப்-202122:41:26 IST Report Abuse
Mani iyer Vijayakumar தமிழ் நாட்டில் சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்கள் விஞ்யானபூர்வமாக ஊழல் செய்தவர்கள் பற்றி படிக்கும் பொழுது நாட்டு பற்று உடையவர்களைப்படிப்பது கூடாதா
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
11-செப்-202120:09:28 IST Report Abuse
sankaranarayanan மாணவர்கள் அரசியல் படிக்க வேண்டும் - தெரிந்திருக்க வேண்டும் ஆனால் அரசியலில் ஈடுபடக்கூடாது - அரசியலில் படிக்கும்போது இறங்கக்கூடாது. இதைத்தான் எல்லா அரசியல் தலைவர்களும் நமது நாட்டில் செய்யும் பெரிய பிழை. தயவுசெய்து படிக்கும் மாணவர்களை உங்கள் அரசியலில் ஈடுபடுத்தாதீர்கள். அவர்கள் வாழ்க்கை நாசமாகிவிடும். மாணவர்களே நீங்களும் உஷாராக இருங்கள் - படியுங்கள் அரசியலில் முழுமூச்சுடன் இறங்கி வாழக்கையை - உங்கள் எதிர்காலத்தை படிக்கும்போதே பாழாக்கிக்கொள்ளாதிர்கள். இது இந்தியாவில் அரசியல்வாதிகள் செய்யும் சூழ்ச்சி எச்சரிக்கை
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
11-செப்-202118:22:21 IST Report Abuse
radha அரசியல் சிந்தனைகள் மற்றும் வரலாறுண்ணா? நம்ம மன்னிப்பு கடித மாமேதை சாவர்க்கர் பத்தியா. தயவு செய்து மன்னிப்பு கடித மாமேதை சாவர்க்கர் பத்தி சொல்லிகுடுத்து மாணவர்களோட மனசையும் கெடுத்துறாதீங்க. அவங்க மாணத்தோட வாழ பழக்கட்டும்.
Rate this:
12-செப்-202107:20:39 IST Report Abuse
ஆரூர் ரங்எங்கே ஆதாரம் காட்டுங்க பார்ப்போம்.🧐 சிறையில் அடைக்கப்பட்ட எல்லாக் கைதிகளையும் விடுவிக்கக் கோரிக்கை வைதது எழுதியது தவறா? நம்ம👹 திராவிஷ கூட்டம் இப்போ 7 பேர் விடுதலை கேட்பது நியாயமில்லைதானே ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X