திருட்டை மறைக்க மூதாட்டி கொன்ற இருவர் கைது

Added : செப் 11, 2021
Share
Advertisement
பாலக்காடு: மூதாட்டியை கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கேரளா, பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலத்தை சேர்ந்தவர் கதீஜா, 63. நேற்று முன் தினம் இரவு வீட்டில், மர்ம மான முறையில் இறந்து கிடந்தார். அவரது சகோதரி மகள் ஷீஜா அளித்த புகாரின்படி, ஒற்றப்பாலம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் ஷீஜா,44, அவரது மகன் யாசிர் 21 ஆகியோர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது.போலீசார்

பாலக்காடு: மூதாட்டியை கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கேரளா, பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலத்தை சேர்ந்தவர் கதீஜா, 63. நேற்று முன் தினம் இரவு வீட்டில், மர்ம மான முறையில் இறந்து கிடந்தார். அவரது சகோதரி மகள் ஷீஜா அளித்த புகாரின்படி, ஒற்றப்பாலம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் ஷீஜா,44, அவரது மகன் யாசிர் 21 ஆகியோர் மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்தது.

போலீசார் கூறுகையில், 'கதீஜாவின், 10 சவரன் நகையை ஷீஜா திருடியுள்ளார். இது கதீஜாவுக்கு தெரியவந்ததால், இருவர் இடையே தகராறு நடந்துள்ளது. ஷீஜா, மகன் யாசிர் ஆகியோர், கதீஜாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X