ஓட்டல் தீ விபத்தில் இருவர் பலி| Dinamalar

ஓட்டல் தீ விபத்தில் இருவர் பலி

Added : செப் 11, 2021 | |
பாலக்காடு: பாலக்காடு அருகே ஓட்டல் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் பலியாகினர்.பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காட்டை சேர்ந்தவர் பாயிதா பஷீர். மண்ணார்க்காடு நகராட்சி தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான ஓட்டல் நெல்லிப்புழையில் உள்ளது.நேற்று அதிகாலை 3 மணி அளவில், ஓட்டலில் திடீரென தீப்பிடித்தது. ஊழியர்கள் அவசரமாக வெளியேறினர். எனினும், முகமது பஷீர்,57, புஷ்பலதா 45, ஆகியோர்

பாலக்காடு: பாலக்காடு அருகே ஓட்டல் தீப்பிடித்து எரிந்ததில் இருவர் பலியாகினர்.

பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காட்டை சேர்ந்தவர் பாயிதா பஷீர். மண்ணார்க்காடு நகராட்சி தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான ஓட்டல் நெல்லிப்புழையில் உள்ளது.நேற்று அதிகாலை 3 மணி அளவில், ஓட்டலில் திடீரென தீப்பிடித்தது. ஊழியர்கள் அவசரமாக வெளியேறினர். எனினும், முகமது பஷீர்,57, புஷ்பலதா 45, ஆகியோர் தீயில் கருகி இறந்தனர். காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மண்ணார்க்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X