மும்பையில் பலாத்காரம் செய்து துன்புறுத்தப்பட்ட பெண் மரணம்

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
மும்பை: மும்பையில் புறநகரில் பலாத்காரம் செய்து, துன்புறுத்தப்பட்ட 34 வயதான பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.மும்பையின் சகிநாகா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு 34 வயதான பெண் ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதப்பதாகவும், அவரை ஒருவர் தாக்குவதாகவும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு
மும்பை, பெண், பலாத்காரம்

மும்பை: மும்பையில் புறநகரில் பலாத்காரம் செய்து, துன்புறுத்தப்பட்ட 34 வயதான பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மும்பையின் சகிநாகா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றில், நேற்று முன்தினம் இரவு 34 வயதான பெண் ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் மிதப்பதாகவும், அவரை ஒருவர் தாக்குவதாகவும் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி மூலம் சிதைக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அந்த பெண் இன்று உயிரிழந்தார். இவர், சாலையோரத்தில் வசித்து வந்ததும், கிடைக்கும் வேலையை செய்து வந்ததும் தெரியவந்தது.


latest tamil news



சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றிய போலீசார், அதில் ஆய்வு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய மோகன் சவுகான்(45) என்பவரை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். செப்.,21 வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.


முதல்வர் கண்டனம்

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே, இது வெட்கப்பட வேண்டிய சம்பவம். கடும் கண்டனத்திற்குரியது. மனித நேயத்திற்கு எதிரானது. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும். விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய பெண்கள் ஆணையமும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், உடனடியாக வழக்குப்பதிவு செய்யவும், விரைவாக விசாரணை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-செப்-202108:52:31 IST Report Abuse
அப்புசாமி அரசுகள், நீதித்துறை, போலுஸ்துறை மூணு பேரும் கூட்டு சேர்ந்து நாட்டைக் கெடுக்குறாங்க.
Rate this:
Cancel
11-செப்-202122:02:19 IST Report Abuse
Saikumar C Krishna இந்த பஞ்சமாபாதக வேலை செய்தவனின் ஆண்குறியை முதலில் தூண்டிக்க வேண்டும். பிறகு ஒரிரு நாளில் மும்பை சாகி நாகா முச்சந்தியில் அவனை கம்பத்தில் கட்டி வைத்து அந்த ஏரியாவில் வசிக்கும் பெண்களிடம் கம்புகளிலனாலோ, இரும்பு குழாய் கம்பிகளாலோ அடித்தே சாகடிக்க வேண்டும். Pocso, டேக்சோ என்பதெல்லாம் பல்லில்லா அரசாணைகள்...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
11-செப்-202120:17:19 IST Report Abuse
Ramesh Sargam நிர்பயா நிகழ்வு நினைவுக்கு வருகிறது. ஹூ ஹூம் திருந்த மாட்டாங்க இவங்க. இதற்கு ஒரே தண்டனை - சவூதி அரேபியா போன்ற நாடுகளில் செய்வதுபோல் பொது இடத்தில் மின்சார கம்பத்தில் கட்டி சுட்டு தள்ளவேண்டும் இந்த மனித மிருகங்களை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X