நீட் தேர்வுக்கு எதிராக செப்.13ல் சட்டசபையில் தீர்மானம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வுக்கு எதிராக செப்.13ல் சட்டசபையில் தீர்மானம்

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (30)
Share
சென்னை:'நீட்' தேர்வுக்கு எதிராக செப்.13-ல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுஎம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான 'நீட்' செப். 12-ம் தேதி நடைபெறும் என கடந்த ஜூலை மாதம் மத்திய கல்வித்துறை அறிவித்தது.
 'நீட்'  தேர்வு,செப்.13ல் சட்டசபையில் தீர்மானம்

சென்னை:'நீட்' தேர்வுக்கு எதிராக செப்.13-ல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர்வு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான 'நீட்' செப். 12-ம் தேதி நடைபெறும் என கடந்த ஜூலை மாதம் மத்திய கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிமுறைகளை பின்பற்றி 'நீட்' தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில் 'நீட் ' தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ள நிலையில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று (செப்.11) கூறியது,
நடப்பு கூட்டத்தொடர் செப்.13ல் நிறைவடைய உள்ளது. அப்போது நடக்க உள்ள கூட்டத் தொடரில் 'நீட்' தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X