சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்அல்சீமரை குறைக்கும் ஆக்சிஜன்முதுமையில் ஏற்படும் நோய்களில் ஒன்று அல்சீமர். இது ஞாபக மறதியை உருவாக்குகிறது. ஜெர்மனியின் 'அலோசியஸ் அல்சீமர்' இதை கண்டறிந்ததால் அவரது பெயரில் அல்சீமர் எனப்படுகிறது. இதற்கு சரியான மருந்து கண்டறியப்படவில்லை. இந்நிலையில் தொடர்ந்து சுத்தமான ஆக்சிஜனை உள்ளிழுப்பதன் (ஆக்சிஜன் தெரபி) மூலம் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம்

அறிவியல் ஆயிரம்
அல்சீமரை குறைக்கும் ஆக்சிஜன்
முதுமையில் ஏற்படும் நோய்களில் ஒன்று அல்சீமர். இது ஞாபக மறதியை உருவாக்குகிறது. ஜெர்மனியின் 'அலோசியஸ் அல்சீமர்' இதை கண்டறிந்ததால் அவரது பெயரில் அல்சீமர் எனப்படுகிறது. இதற்கு சரியான மருந்து கண்டறியப்படவில்லை. இந்நிலையில் தொடர்ந்து சுத்தமான ஆக்சிஜனை உள்ளிழுப்பதன் (ஆக்சிஜன் தெரபி) மூலம் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகி அல்சீமரின் பாதிப்பு அளவு அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது என இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட 6 பேரை ஆய்வு செய்ததில் இதை கண்டறிந்தனர்.

தகவல் சுரங்கம்
வளையாத ரயில் பாதை
உலகில் 140க்கும் அதிகமான நாடுகளில் ரயில் சேவை உள்ளது. மொத்த ரயில் பாதைகளின் துாரத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா ஆகியவை முதல் நான்கு இடத்தில் உள்ளன. இந்நிலையில் உலகளவில் வளையாமல் நீண்ட துாரம் நேராக செல்லும் ரயில் பாதை ஆஸ்திரேலியாவில் உள்ளது. இது தெற்கு ஆஸ்திரேலியாவின் போர்ட் அகஸ்ட்டாவில் தொடங்கி மேற்கு ஆஸ்திரேலியாவின் கல்கூரிலி வரை நேராகவே செல்கிறது. துாரம் 478 கி.மீ., இது 'டிரான்ஸ் - ஆஸ்திரேலியா ரயில் பாதை' என அழைக்கப்படுகிறது. 1917ல் பயன்பாட்டுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X