பொது செய்தி

இந்தியா

'நீட்' தேர்வில் என்95 மாஸ்க் கட்டாயம்:தேசிய தேர்வு முகமை

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: நாளை (12ம் தேதி) நடைபெற உள்ள நீட் தேர்வின் போது கட்டாயம் என் 95 மாஸ்க் அணிந்து தான் தேர்வு எழுத வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.கோவிட் தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான( 2021) நீட் தேர்வு நாளை 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ,மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இதனிடையே மாணவ, மாணவியருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய

சென்னை: நாளை (12ம் தேதி) நடைபெற உள்ள நீட் தேர்வின் போது கட்டாயம் என் 95 மாஸ்க் அணிந்து தான் தேர்வு எழுத வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கோவிட் தொற்றுக்கு மத்தியில் இந்த ஆண்டுக்கான( 2021) நீட் தேர்வு நாளை 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவ,மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இதனிடையே மாணவ, மாணவியருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

அதன் அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் என். 95 மாஸ்க் வழங்கப்படும். அதனை அணிந்து தான் தேர்வு எழுத வேண்டும்.



latest tamil news



தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் தண்ணீர் பாட்டில் , 50 மி.லி.,சானிடைசர், உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.

மாணவர்கள் ஹால் டிக்கெட்டின் முன்பக்கத்தில் கோவிட் தொற்று குறித்த விவிரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் . நீட் தேர்வு நடைபெறும் நாளன்றுக்கு முன்னதாக 14 நாட்களில் கொரோனா அறிகுறிகள் இருந்ததா என்பதை குறிப்பிட வேண்டும்.


latest tamil news



பிற்பகலில் 2.00 மணிக்கு நடைபெறும் தேர்வுக்கு, 1.30 மணிக்கு பின்னர் வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்

இவை தவிர வழக்கம் போல் மாணவிகள் நகைகள் அணிந்து செல்ல, கால்குலேட்டர், மொபைல்போன் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை. என்பன உள்ளிட்ட விதிமுறைகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
12-செப்-202109:07:22 IST Report Abuse
Kumar அனேகமாக நாளை நீட் தேர்வு ரத்து ஆகும். ஏன்னா தமிழ்நாட்டில் சட்டசபையில் நாளை நீட் ரத்துக்கு தீர்மானம் நிறைவேறப் போகிறது. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
12-செப்-202107:27:20 IST Report Abuse
அப்புசாமி நீட் தேர்வை ரத்து செய்வோம்னு வாக்குறுதி குடுத்து ஆச்சியைப் புடிச்சவங்க எல்லாம் மூஞ்சியை மறைச்சு முக்காடு போட்டுக்கிட்டு சட்டமன்றம் செல்வது கட்டாயம். முடியாதவர்கள் டோபா, மீசையை எடுத்து விட்டு செல்ல அனுமதி உண்டு.
Rate this:
Cancel
Er. G.Selvaraju - Ambattur,இந்தியா
12-செப்-202107:07:32 IST Report Abuse
Er. G.Selvaraju தாலி அணிந்து செல்ல அனுமதி உண்டா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X