கலைவாணர் அரங்க பராமரிப்பில் அலட்சியம்: கண்டு கொள்ளாத பொதுப்பணித்துறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலைவாணர் அரங்க பராமரிப்பில் அலட்சியம்: கண்டு கொள்ளாத பொதுப்பணித்துறை

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (3)
Share
சென்னை:தற்காலிக சட்டசபை கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தை, பொதுப்பணித் துறையினர் முறையாக பராமரிக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.சென்னை வாலாஜா சாலையில், ஓமந்துாரார் தோட்டத்தில் இருந்த பழைய கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டு, 63 கோடி ரூபாயில் மூன்று தளங்களுடன் புதிய அரங்கம் கட்டப்பட்டு உள்ளது. இந்த அரங்கத்தை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 பிப்ரவரியில்
 கலைவாணர் அரங்க பராமரிப்பில் அலட்சியம்: கண்டு கொள்ளாத பொதுப்பணித்துறை

சென்னை:தற்காலிக சட்டசபை கூட்டம் நடக்கும் கலைவாணர் அரங்கத்தை, பொதுப்பணித் துறையினர் முறையாக பராமரிக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

சென்னை வாலாஜா சாலையில், ஓமந்துாரார் தோட்டத்தில் இருந்த பழைய கலைவாணர் அரங்கம் இடிக்கப்பட்டு, 63 கோடி ரூபாயில் மூன்று தளங்களுடன் புதிய அரங்கம் கட்டப்பட்டு உள்ளது. இந்த அரங்கத்தை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 பிப்ரவரியில் திறந்து வைத்தார்.இதனை கலையரங்கமாக மட்டுமின்றி, நவீன வசதிகளுடன் கூடிய திரையரங்கமாக பயன்படுத்தும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அரசு கட்டடத்தில் முதல் முறையாக இங்கு நகரும் படிகட்டு வசதியும் உள்ளது.

கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள பல்நோக்கு அரங்கம் 1,300 பேர் அமரும் வசதி உடையது.இந்த அரங்கம் 2020 செப்டம்பரில் தற்காலிக சட்டசபையாக மாற்றப்பட்டது. அங்கு தான் தற்போது சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது.பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் இந்த கட்டடம் உள்ளது. ஆனால், பொதுப்பணித் துறையினர் சரியாக பராமரிக்க வில்லை. பல இடங்களில் செயற்கை மேற்கூரைகள் பெயர்ந்து கிடக்கின்றன. கழிவறைக்குள் இருந்து கழிவு நீர் செல்லும் குழாய்களை சரிபார்க்கும் ரகசிய கதவும் திறந்து கிடக்கிறது. அவற்றில் குப்பை, உணவு கழிவுகள் கொட்டப்படுகின்றன.

சட்டசபைக்கு செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட கழிவறை, உரிய பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுகிறது. 'எஸ்கலேட்டர், லிப்ட்' போன்றவை அடிக்கடி 'மக்கர்' செய்வதால், அவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அரங்கின் பின்பக்க நுழைவாயில் அருகேயுள்ள இடம் புற்கள், செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.

கட்டடத்தினுள் சிமென்ட் மற்றும் பெயின்ட் பூச்சுக்களும் ஆங்காங்கே பெயர்ந்து வருகின்றன. பொதுப்பணித் துறை முறையாக பராமரிக்காவிட்டால், மற்ற அரசு கட்டடங்கள் போன்று, இந்த பிரமாண்ட கட்டடமும் விரைவில் பாழடைந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X