கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீதித்துறையில் 'ஏ - 4 பேப்பர்' பயன்பாடு விரைவில் உத்தரவு பிறப்பிக்க அறிவுரை

Added : செப் 11, 2021
Share
Advertisement
சென்னை:நீதித்துறையில், 'ஏ - 4 பேப்பர்' பயன்பாடு தொடர்பாக, விரைவில் அரசு உத்தரவு பிறப்பிப்பதை உறுதி செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜிட்டின் என்பவர் தாக்கல் செய்த மனு: உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தாக்கல் செய்யும் போது, ஆவணங்களின் நகல்கள் ஏராளமாக எடுக்கப்பட வேண்டும். இதற்கு, அதிக எண்ணிக்கையில் பேப்பர் தேவை.

சென்னை:நீதித்துறையில், 'ஏ - 4 பேப்பர்' பயன்பாடு தொடர்பாக, விரைவில் அரசு உத்தரவு பிறப்பிப்பதை உறுதி செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜிட்டின் என்பவர் தாக்கல் செய்த மனு: உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தாக்கல் செய்யும் போது, ஆவணங்களின் நகல்கள் ஏராளமாக எடுக்கப்பட வேண்டும். இதற்கு, அதிக எண்ணிக்கையில் பேப்பர் தேவை. பச்சை, வெள்ளை வண்ணத்திலான பேப்பரின் தடிமன் மற்றும் அளவு, ஏ - 4 அளவு பேப்பரை விட அதிகம். மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்யும் முறை இருந்தாலும், நேரடியாக பேப்பர் வடிவிலும் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.

உயர் நீதிமன்றத்திலும், கீழமை நீதிமன்றங்களிலும், முழுமையாக மின்னணு முறையில் வழக்கு தாக்கல் செய்வதை அமல்படுத்த வேண்டும்.அனைத்து தகவல் தொடர்பும், ஏ - 4 அளவு பேப்பரில், இரு பக்கமும் அச்சிடும் வகையில் இருக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோல்கட்டா, கர்நாடகா, கேரளா, சிக்கிம், திரிபுரா, அலகாபாத் உயர் நீதிமன்றங்களில், புதிய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன அதேபோல், சென்னை உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் பின்பற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் அஜய் பிரான்சிஸ் லயோலா ஆஜரானார்.உயர் நீதிமன்ற நிர்வாகம் சார்பில் வழக்கறிஞர் சந்தானராமன் ஆஜராகி, ''நீதித்துறையில், ஒரே மாதிரியாக, ஏ - 4 அளவு பேப்பர் பயன்படுத்துவது தொடர்பாக, அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்,'' என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் முத்துக்குமாரிடம், விரைவில் அரசு தகுந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு உறுதி செய்யும்படி, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தொடர்ந்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: மின்னணு முறையில் வழக்கு பதிவை பொறுத்த வரை, ஏற்கனவே ஒரு நடைமுறை அமலில் உள்ளது.நேரடியாக வழக்கு தாக்கல் நடைமுறை யையும், குறிப்பிட்ட காலத்துக்கு தொடர வேண்டியுள்ளது.மின்னணு வழக்கு தாக்கல் நடைமுறை பற்றி எளிதில் அறிந்து, பின்பற்ற ஏதுவாக, வீடியோ ஒன்றை தயாரிக்கலாம் என்று மனுதாரர் வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில், மனுதாரர் தரப்பு தயாரித்து, உயர் நீதிமன்ற ஒப்புதலுக்கு அனுப்பலாம்.துல்லியமான தகவலை அளிக்க, உயர் நீதிமன்ற தகவல் தொழில்நுட்ப பதிவாளரின் உதவியையும், மனுதாரர் பெற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை, நவ.,1 க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X