பொருட்கள் விலை நிர்ணயம் தாமதம் அரசு பணிகளை துவக்குவதில் சிக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொருட்கள் விலை நிர்ணயம் தாமதம் அரசு பணிகளை துவக்குவதில் சிக்கல்

Added : செப் 11, 2021
Share
சென்னை:கட்டுமான பொருட்களின் விலையை பொதுப்பணித் துறை நிர்ணயம் செய்யாததால், அரசு கட்டுமான பணிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பொதுப்பணித் துறை வாயிலாக மருத்துவமனைகள், பள்ளிகள் உட்பட பல்வேறு அரசு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டி, பராமரிக்கப்படுகின்றன. வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், போலீஸ் வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,

சென்னை:கட்டுமான பொருட்களின் விலையை பொதுப்பணித் துறை நிர்ணயம் செய்யாததால், அரசு கட்டுமான பணிகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறை வாயிலாக மருத்துவமனைகள், பள்ளிகள் உட்பட பல்வேறு அரசு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டி, பராமரிக்கப்படுகின்றன. வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், போலீஸ் வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை வாயிலாகவும் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.இந்த பணிகள், ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரலில் சிமென்ட், மணல், ஜல்லி, ஸ்டீல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் விலை; கட்டுமான தொழிலாளர்களின் தினக்கூலியும், பொதுப்பணித்துறை வாயிலாக நிர்ணயம் செய்யப்படும்.இதை, கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் அனைத்து துறைகளும் பின்பற்றும். தனியார் அடுக்குமாடி கட்டுமானப் பணிகளுக்கும், இதே வழிமுறை பின்பற்றப்படும்.

இந்த விலையை பின்பற்றி, திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்படும்.தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, ஏப்ரலில் கட்டுமானப் பொருட்களுக்கு பொதுப்பணித் துறை விலை நிர்ணயம் செய்யவில்லை. தற்போது, பொதுப்பணித் துறை என்பது பொதுப்பணி மற்றும் நீர்வளம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிரிவு முதன்மை தலைமை பொறியாளர்களும் இணைந்து, கட்டுமானப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்து, அரசிற்கு அனுப்ப வேண்டும். அதன்பின், அரசு உத்தரவாக வெளியிடும்.ஆட்சி அமைந்து, நான்கு மாதங்கள் முடிந்தும், விலை நிர்ணய பட்டியல் வெளியிடப்படவில்லை. புதிய விலையை நிர்ணயம் செய்யாததால், அரசின் புதிய கட்டுமானப் பணிகள் துவங்குவதிலும் இழுபறி நீடித்து வருகிறது.

நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளரின் ஒத்துழைப்பு கிடைக்காததே இதற்கு காரணம் என, கூறப்படுகிறது. இப்பிரச்னையில், பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் ஆகிய இருவரும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X