வைத்திலிங்கத்தின் அமைதிக்கு என்ன காரணம்?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

வைத்திலிங்கத்தின் அமைதிக்கு என்ன காரணம்?

Added : செப் 11, 2021
Share
வைத்திலிங்கத்தின் அமைதிக்கு என்ன காரணம்?''பணத்தை சுருட்டுன அதிகாரிக்கு பதவியை திரும்ப கொடுத்துருக்காவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.இஞ்சி டீயை ருசித்த அந்தோணிசாமி, ''என்னன்னு விளக்கமா சொல்லுங்க...'' என கேட்டார்.''கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துல மக்கள் செலுத்துன வரியில, 20 லட்சம் ரூபாயை வருவாய் பிரிவினர் சுருட்டுனதா கடந்த
 டீ கடை பெஞ்ச்


வைத்திலிங்கத்தின் அமைதிக்கு என்ன காரணம்?''பணத்தை சுருட்டுன அதிகாரிக்கு பதவியை திரும்ப கொடுத்துருக்காவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அண்ணாச்சி.இஞ்சி டீயை ருசித்த அந்தோணிசாமி, ''என்னன்னு விளக்கமா சொல்லுங்க...''
என கேட்டார்.

''கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துல மக்கள் செலுத்துன வரியில, 20 லட்சம் ரூபாயை வருவாய் பிரிவினர் சுருட்டுனதா கடந்த ஆட்சியில புகார் கிளம்பியது வே...

''அ.தி.மு.க., ஆட்சியில, மோசடியில் சம்பந்தப்பட்ட உதவி வருவாய் அலுவலர் மீது, 'சார்ஜ்' பைல் பண்ணி, 'நோட்டீஸ்' வழங்குனாங்க... பதவியையும் பறிச்சாவ வே...

''தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மேலிடத்துல இருந்து உத்தரவு வந்ததால அவருக்கு மறுபடியும் பதவி கொடுத்துருக்காவ... ஆனால், சுருட்டுன பணத்தை இன்னும் மீட்காம இருக்காவ வே...'' என
முடித்தார் அண்ணாச்சி.அப்போது ஒலித்த போனை எடுத்த அன்வர்பாய், ''சத்தியமா சொல்லுறேன்... பிரபா எனக்கு பணம் கொடுக்கலை பா...'' என பேசிக்கொண்டிருந்தார்.

''கிராம நத்தம் பட்டாவை பதிவு செய்யுறதுக்கு, 1 லட்சம் ரூபாய் வசூலிக்கறா ஓய்'' என அடுத்த தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.

''பத்திர பதிவு செய்யுறதுல தான் வசூல் வேட்டை அதிகமா நடக்குமே... நீங்க விஷயத்தை சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''சென்னைக்கு பக்கத்துல இருக்கற கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவகத்துல லஞ்சம் கொடிக்கட்டி பறக்கறது ஓய்...

''கிராம நத்தம் நிலத்துக்கு அரசு பட்டா கொடுக்கறது... கொஞ்ச வருஷம் கழிச்சு அந்த பட்டாவை, கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகத்துல பத்திரமாக பதிவு செய்யணுமுன்னா 1 லட்சம் ரூபாய் கேட்கறா ஓய்...

''தாம்பரம், சைதாப்பேட்டையில் பதிவு செஞ்ச தாய் பத்திரத்தை, இந்த சார் - -பதிவாளர் அலுவலகத்துல பதிவு செய்யணுமுன்னா, 3 லட்சம் ரூபாய் கொடுக்கணுமாம் ஓய்...

''இது பத்தி கேட்டா, அங்கே இருக்கற அதிகாரி, 'நான் யாரு தெரியுமா... மாநில சங்க நிர்வாகி... மந்திரிக்கிட்ட சொன்னாலும் ஒண்ணும் பண்ண முடியாது'ன்னு தெனாவட்டா சொல்லறாராம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
நாயர் கடைக்கு வந்தவரிடம்,

''என்ன ஆறுமுகம் செழிப்பா இருக்குறீங்க போல...'' என்றார், அந்தோணிசாமி.

''ஒதுங்கி இருக்காரா, ஒதுக்கி இருக்காங்களான்னு புரியலையே பா...'' என கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''யாரு, என்னன்னு விளக்கமா சொல்லுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''தமிழகத்துல ஒன்பது மாவட்டங்கள்ல ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்க போகுது... இதுக்காக அ.தி.மு.க., சார்புல முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மாநில நிர்வாகிகள் என பலரையும் பொறுப்பாளர்களாக நியமிச்சு இருக்காங்க பா...

''ஆனால் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.எல்.ஏ.,வுமான வைத்திலிங்கத்தின் பெயர் பொறுப்பாளர் பட்டியல்ல இல்லை பா...

''கொஞ்ச நாளைக்கு முன், தஞ்சை 'மாஜி' எம்.பி., பரசுராமன் உள்ளிட்ட சிலர், வைத்திலிங்கம் மீது இருந்த அதிருப்தியால, தி.மு.க.,வுல இணைஞ்சாங்க பா...

''அதனால கட்சித் தலைமை, வைத்திலிங்கம் மீது அதிருப்தியில இருக்குன்னு ஒரு தரப்பும், அவரே கேட்டுக்கிட்டதால தான் பொறுப்பாளராக நியமிக்கலைன்னு இன்னொரு தரப்பும் சொல்லுது பா...

''ஆனால் ஒண்ணு மட்டும் தெரியுது... அ.தி.மு.க.,வுல வைத்திலிங்கம் அமைதியா இருக்குறார் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

***********


காங்., தொழிற்சங்க சொத்துக்களை விற்க திட்டம்!''ஊட்டியை அடுத்து குன்னுாருக்கும் குறி வச்சுட்டாவ வே...'' என, ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, விவாதத்தை ஆரம்பித்தார் அண்ணாச்சி.

''யார், என்னன்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''நீலகிரி மாவட்டம், ஊட்டி மார்க்கெட்ல பல வருஷங்களா வாடகை தராம டிமிக்கி குடுத்துட்டு இருக்கிற கடைகளுக்கு சீல் வச்சு, அதிரடியா வாடகை வசூல் பண்ணிட்டு இருக்காங்கல்லா... அடுத்து, குன்னுார் நகராட்சி மார்க்கெட்லயும் இதே நடவடிக்கையை எடுக்க, உள்ளாட்சித் துறை மேலிடத்துல இருந்து உத்தரவு வந்துட்டு வே...

''இதனால, பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வச்சிருக்கிற வியாபாரிகள், சங்க நிர்வாகிகள் கலக்கத்துல இருக்காவ... கடைகளை வாங்கி உள் வாடகைக்கு விட்டிருக்கிற பலரும், கையை பிசைஞ்சிட்டு இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''வியாபாரம் பண்ணி லாபம் சம்பாதிக்கிறப்ப, அதுக்கான வாடகையை குடுக்கிறது தானே சரியா இருக்கும்...'' என்ற அன்வர்பாய், ''அரிசி கடத்தல்ல கலக்குறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.

''யாரை சொல்றீர் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்துார், மாடம்பாக்கம், சேலையூர் பகுதிகள்ல ரேஷன் அரிசி கடத்தல் நடக்குது... குறிப்பா, பார்வதி நகர், நாகாத்தம்மன் கோவில் தெருவுல இருக்கிற ரெண்டாம் நம்பர் கடைகள்ல, ஒரு வருஷத்துக்கும் மேலா அரிசி கடத்தல் அமோகமா நடந்துட்டு இருக்குது பா...'' என அன்வர்பாய் முடிக்கும் முன்பே, ''லோகநாதன், ஆனந்தன் வராங்க... ஒரு நிமிஷம் பேசிட்டு வந்துடுதேன்...'' என, கழன்று சென்றார் அண்ணாச்சி.

''மேல சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''இந்த கடைகள்ல இருந்து கடத்துற அரிசியை, கொளப்பாக்கத்துல வித்துடுறாங்க... இந்த கடைகள்ல வேலை பார்க்கிற ரெண்டு பேரும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் பெயரை சொல்லி, ரேஷன் கடைகள்ல, மாசம் 10ல இருந்து 15 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வசூல் வேட்டையும் நடத்திட்டு இருக்காங்க பா...'' என முடித்தார் அன்வர்பாய்.

''தொழிற்சங்க சொத்துக்களை பாதுகாக்க திட்டமிட்டிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''எந்த கட்சி சங்கத்தைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''தமிழகத்துல, காங்கிரஸ் தொழிற்சங்கமான, ஐ.என்.டி.யு.சி.,க்கு பல நுாறு கோடி மதிப்பு சொத்துக்கள் இருக்கு... மாவட்ட வாரியா எவ்வளவு சொத்துக்கள் இருக்குன்னு, புள்ளி விபரங்களை சேகரிக்கவும், அவற்றை பாதுகாக்கவும் குழு அமைக்க போறா ஓய்...

''தொழிற்சங்க சொத்துக்கள் சரிவர பராமரிப்பின்றி பல இடங்கள்ல கிடக்கு... இதனால, அவற்றை வித்துட்டு, அந்த பணத்துல மத்திய ஐ.என்.டி.யு.சி.,க்கு ஒரு பங்கும், மாநில ஐ.என்.டி.யு.சி.,க்கு ஒரு பங்கும், மாவட்ட ஐ.என்.டி.யு.சி.,க்கு ஒரு பங்கும்னு பிரிச்சுக்கலாம்னு பிளான் பண்ணிண்டு இருக்கா...

''இதனால, மாவட்டங்கள்ல இருக்கற சொத்துக்களை, தலைமைக்கு தெரியாம, யாராவது வித்துட்டா, அவா மேல ஐ.என்.டி.யு.சி., ட்ரஸ்ட் சட்ட விதிகள்படி நடவடிக்கை எடுக்கப்படும்னு மாவட்ட நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார்
குப்பண்ணா.அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X