பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் சரிந்த இந்திய பொருளாதாரம் அபார வளர்ச்சி

Updated : செப் 13, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
கொரோனா தொற்று பரவலால் கடும் சரிவை சந்தித்த இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஆச்சரியப்படும் வகையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் - ஜூன் வரை, 20.1 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச அளவில் பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அதிக வளர்ச்சியை எட்டியுள்ள நாடு என்ற பெருமை நமக்கு கிடைத்துள்ளது.கொரோனா
கொரோனா,சரிந்த இந்திய பொருளாதாரம் எழுச்சி, அபார வளர்ச்சி

கொரோனா தொற்று பரவலால் கடும் சரிவை சந்தித்த இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஆச்சரியப்படும் வகையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் - ஜூன் வரை, 20.1 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச அளவில் பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அதிக வளர்ச்சியை எட்டியுள்ள நாடு என்ற பெருமை நமக்கு கிடைத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று கடந்த 20 மாதங்களாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. வல்லரசு நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள் என அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் கொரோனா தொற்றால் பெரும் சரிவை சந்தித்துஉள்ளன.

இந்தியாவின் பொருளாதாரமும் வைரஸ் பரவலால் பாதிப்புக்குள்ளானது. அடுத்தடுத்து வந்த இரண்டு ஊரடங்குகளால் கடந்த காலாண்டுகளில் நம் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிப்படைந்துஇருந்தது.பொருளாதார வளர்ச்சி -24.5 சதவீதம் என்கிற அளவுக்குக் குறைந்திருந்தது.இந்நிலையில் தான் நம் பொருளாதாரம் கொரோனா இரண்டாவது அலைக்கு நடுவிலும் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.


முக்கியக் காரணிநாட்டின் ஜி.டி.பி., 20.1 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது; இது மக்களிடமும், பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. ஏனெனில் சர்வதேச அளவில் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அதிகமான அளவில் ஜி.டி.பி வளர்ச்சி அடைந்த நாடு இந்தியா தான். பிரிட்டனின் ஜி.டி.பி., வளர்ச்சி 22.2 சதவீதமாக உள்ளது.
இந்த நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் உற்பத்தித் துறை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 49.6 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டில் விவசாயத் துறை பெரிய அளவில் பாதிப்பு அடையவில்லை என்றாலும், கடந்த காலாண்டிலும் நல்ல வளர்ச்சியைக் எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. மின்சாரப் பயன்பாடு, போக்குவரத்து, ஜி.எஸ்.டி., வசூல், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டு அளவு ஆகிய அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கியக் காரணி யாக அமைந்துள்ளது.


எட்டவில்லைபங்குச் சந்தை குறியீடுகள் உயரத் துவங்கியுள்ளன. கட்டுமானத் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 50 சதவீத சரிவை சந்தித்தது. ஆனால் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 68.3 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. மத்திய அரசின் ஆதரவாளர்கள் இந்த வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நிர்வாகமே காரணம் என கூறுகின்றனர். எனினும், இந்த வளர்ச்சி தொடருமா என்ற சந்தேகத்தையும், பொருளாதார நிபுணர்கள் சிலர் எழுப்பியுள்ளனர்.
ஏனெனில் கொரோனா பரவலுக்கு முன் 2019ல் இருந்த வளர்ச்சியை விட நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் விவசாயத்துறையும், மின்சாரத்துறையும் தான்அதிக வளர்ச்சியை அடைந்து உள்ளன.

உற்பத்தி துறை 2019ன் முதல் காலாண்டில் இருந்த வளர்ச்சியை விட கடந்த காலாண்டில் 17 சதவீதம் குறைவாகவே உள்ளது. இப்படி பல துறைகளிலும் 2019ல் இருந்த வளர்ச்சியை விட குறைவாகவே உள்ளது.அதனால் நாட்டின் பொருளாதாரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புஇருந்த நிலையை எட்டவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
நம்பிக்கைகொரோனா இரண்டாவது அலை பரவாமல் இருந்திருந்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.அதேநேரத்தில் மூன்றா வது அலை பரவினால் இப்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் மாபெரும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. அத்தகைய சரிவு ஏற்படாமல் இருக்க, இப்போதே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டியது அவசியம். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விரைவு படுத்தப்பட்டு உள்ளன. இதனால் இரண்டாம் காலாண்டில் நல்ல மாற்றம் தெரியும் என பொருளாதார நிபுணர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். - சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
12-செப்-202122:48:39 IST Report Abuse
Mirthika Sathiamoorthi திரும்ப திரும்ப மோடி ஆதரவு மோடி எதிர்ப்புண்ணே கட்டம் கட்ட படுகிறது..இங்கே யாருக்கும் ஆதரவோ எதிர்ப்போ அல்ல என்கருத்து..நாட்டில் வளர்ச்சி இருக்கவேண்டும் பொருளாதாரம் வளரவேண்டும் இதுவே ஏன் எண்ணமும் கூட...ஆனால் இந்த வளர்ச்சி எலோருக்குமானதா? GDP யில் 90 சதம் கடன்வேற வாங்கிவச்சிருக்கோம்..அப்போ உண்மையிலே GDP வளர்ச்சி யாருக்கு ? நாடு வளர நானும் வளறுவேனா? இப்போ நான் ஒரு நிறுவனத்தில் வேலைசெயுறேன் இங்கே என் வர்ச்சின்னு கேட்ட கம்பெனி கோடிகளில் லாபம் சம்பாதிக்க என் சம்பளமம் இல்லைன்னா பதவிஉயர்வும் சம்பளமும் ஏறணும் இதுதானே வளர்ச்சி? கம்பெனி வளர வளர நானும் வளர்ந்துட்டே போவேன் சரிதானே? 5 வருசத்துக்கு முன் எப்படி இருந்தேன் இப்போ எப்படி இருக்கேன் இந்த வேறுபாடுதான் வளர்ச்சி? ஒரு மனுஷனை பார்த்து எப்படிப்பா இருக்க வசதியா இருக்கையான்னு கேட்ட அவன் ஒன்னு நல்ல இருக்கேன்னு சொல்லணும் இல்லைனா ஏதோ இருக்கேன்னு சலிச்சுக்கணும்...இங்கே என் போன்ற சாமானியனின் வளர்ச்சி என்பது என்ன ? அதைத்தான் நான்கேக்குறேன்...எனக்கு பொருளாதரம் புரியாது..நான் ஒரு சாதரண தினக்கூலி... சும்மா உங்களுக்கு தெரிந்த ஒரு சாமணியனை பார்த்து ஒரு விவசாயியை பார்த்து ஒரு தொழிலாளியை பார்த்து தம்பி கொரானாவுக்கு முன் கொரானாவுக்கு பின் வாழ்க்கை அப்படின்னு கேளுங்க உண்மை புரியும்...GDP யாருக்கான வளர்ச்சி? வளர்ச்சி என்பது எனக்கு புரியலை. மக்கு நான்.. GDP சத்தியமா புரியலை .தெளிவா சொல்லுங்க உதாரணத்துக்கு 10 சதம் GDP வளர்ந்தச்சப்ப இதனால் இந்தியன் ஒருவனுக்கு எவ்வளவு சம்பளஉயர்வு போனஸ் கிடைக்குமான்னு சொல்லுங்க? பெட்ரோல் விலை குறையுமா? விலைவாசி குறையுமா? பஸ் கட்டணம் குறையுமா? கரண்டு பில் குறையுமா? எனக்கு இதெல்லாம் நடக்கும்ன்னு தெரியலை அதனால் GDP வளர்ந்தாலும் இதே நிலை வாழ்க்கையே கஷ்டம்...GDP வளராடினாலும் இதே நிலை அப்டின்கிறேன் ..GDP யம் மோடியையும் கொண்டாடும் உங்களைமாதிரி ஆளுங்களுக்கு சம்பளஉயர்வும் போனஸும் கிடைக்கும்போல அதனால் உங்களால் எல்ல விலைவாசியுயர்வையும் சமாளிக்க முடியும்ன்னு தோணுது..அதுதான் மகிழ்ச்சியடையுறீங்க...வாழ்த்துக்கள்.நான் உங்களவுக்கு அதிர்ஷ்டம் இல்ல ஆல். எனக்கெதுக்கு உங்க வயித்தெரிச்சல்...ஏழை பாழைகளின் வயித்தெரிச்சலுக்கு பெயர் பசி. பசின என்னன்னே தெரியாத உங்களவுக்கு புண்ணியம் செஞ்சவங்க இல்லை பாருங்க..இலவசத்துக்கும் ஓசி அரிசிக்கும் கையேந்துருவாங்க நாங்க எங்களுக்கு GDP வளர்ந்த என்ன நாசமா போனயென்ன அடுத்தவேளை சோத்துக்கு என்னபண்ணும்ன்னு யோசிக்கணும்..சோத்துக்கே வழியில்லையாம் இதுல தீர்வு சொல்ல சொன்ன? அதுதான் GDP பார்த்து பெருமிதம் கொள்ள முடியலை. மன்னிச்சிடுங்க.ஏதோ ஆதங்கத்தில பிஜேபி யை குறைசொன்னதுக்கு ..மோடி வாழ்க போதுமா? ஒருத்தர் சொல்றாரு தொழில் முன்னேற்றம் வரணும் புதிய தொழிற்சாலைகள் வரணும் அதற்கு எந்த அரசும் உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை.நான் நேரு, மண் மோகன், ராஜீவு என்றெல்லாம் உருட்டினா..இவர் எந்த அரசும்ன்னு யாரை சொல்றாரு? நேரு, மண் மோகன், ராஜீவு அதோட இந்திராகாந்தி V P சிங் வாஜிபாய் மோடியையும் சேர்த்து சொல்றாரோ? ஒன்னும் புரியலையே? படிச்சப்புள்ள பேசுறது என் மாதிரி மக்குப்பயலுக்கு எங்கே புரியப்போகுது..?
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
12-செப்-202121:24:51 IST Report Abuse
Nagercoil Suresh ஒருவரை தூக்கி 24 அரை அடி கிணற்றிற்குள் தூக்கிபோட்டுவிட்டு 20.1 அடி உயரத்திற்கு மேல்நோக்கி கட கட என இழுத்து தூக்கிவிட்டு அதிலிருந்து வெளியில் வராமல் இருந்துவிட்டு பெருமிதம் கொள்வதைப்போல் உள்ளது பொருளாதார கணக்குகள். இதற்கு பெயர் வளர்ச்சி இல்லை வீழ்ச்சியில் இருந்து மீள்வது..100 அடிக்கு கீழே தூக்கி போட்டு விட்டு 90 அடி தூக்கியிருந்தால் இன்னும் பெரிதாக தெரிந்திருக்கும். பொருளாதார அறிக்கையை பார்த்தால் கொரோனாவால் லாபம் அடைந்ததைப்போல் உள்ளது, அடுத்த ஆண்டிலாவது பழைய நிலைக்கு வந்தால் பெருமிதம் கொள்ளலாம்...
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
12-செப்-202120:16:17 IST Report Abuse
spr பொருளாதார வளர்ச்சி என்பதெல்லாம் சாமான்ய மக்களான உங்களுக்குத் தெரியாது நமக்குத் தெரிந்ததெல்லாம் கண் முன்னால் காணும் புடலங்காய் வளர்ச்சிதான் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பணம் கொடுத்து படித்த படிப்பிற்கேற்ற வேலை வாய்ப்பு மதிப்புடன் கூடிய வருமானம் தட்டுப்பாடுகளில்லாமல் அதிக விலை கொடுக்காமல் பொருட்கள் கிடைப்பது போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்குமானால் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது என்று நம்பலாம் நமக்குத் தெரிந்து புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை கடன் கொடுப்பது சலுகைகள் மானியங்கள் அதிகரித்து மக்கள் கையில் கொஞ்சம் பணம் நடமாட தொடங்கியிருக்கிறது சேவை செய்வோர் தங்களது சேவைக்கு கட்டணத்தை அதிகரித்து விட்டனர் பெருவாரியான மக்களை கட்டிட வேலை சாலை அமைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தும் அரசு முயற்சி சரியானதா இந்தத் தொழிலும் மதிப்பு வாய்ந்ததுதான் என்றாலும் பட்டப்படிப்பு படித்தவர் டீக்கடை வைக்கலாம் என்றால் செலவு செய்து படிக்க வேண்டிய தேவை என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X