கொரோனாவால் சரிந்த இந்திய பொருளாதாரம் அபார வளர்ச்சி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் சரிந்த இந்திய பொருளாதாரம் அபார வளர்ச்சி

Updated : செப் 13, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (12)
Share
கொரோனா தொற்று பரவலால் கடும் சரிவை சந்தித்த இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஆச்சரியப்படும் வகையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் - ஜூன் வரை, 20.1 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச அளவில் பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அதிக வளர்ச்சியை எட்டியுள்ள நாடு என்ற பெருமை நமக்கு கிடைத்துள்ளது.கொரோனா
கொரோனா,சரிந்த இந்திய பொருளாதாரம் எழுச்சி, அபார வளர்ச்சி

கொரோனா தொற்று பரவலால் கடும் சரிவை சந்தித்த இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஆச்சரியப்படும் வகையிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏப்ரல் - ஜூன் வரை, 20.1 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. சர்வதேச அளவில் பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அதிக வளர்ச்சியை எட்டியுள்ள நாடு என்ற பெருமை நமக்கு கிடைத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று கடந்த 20 மாதங்களாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. வல்லரசு நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள் என அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் கொரோனா தொற்றால் பெரும் சரிவை சந்தித்துஉள்ளன.

இந்தியாவின் பொருளாதாரமும் வைரஸ் பரவலால் பாதிப்புக்குள்ளானது. அடுத்தடுத்து வந்த இரண்டு ஊரடங்குகளால் கடந்த காலாண்டுகளில் நம் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிப்படைந்துஇருந்தது.பொருளாதார வளர்ச்சி -24.5 சதவீதம் என்கிற அளவுக்குக் குறைந்திருந்தது.இந்நிலையில் தான் நம் பொருளாதாரம் கொரோனா இரண்டாவது அலைக்கு நடுவிலும் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.


முக்கியக் காரணி



நாட்டின் ஜி.டி.பி., 20.1 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது; இது மக்களிடமும், பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. ஏனெனில் சர்வதேச அளவில் ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு அடுத்தபடியாக அதிகமான அளவில் ஜி.டி.பி வளர்ச்சி அடைந்த நாடு இந்தியா தான். பிரிட்டனின் ஜி.டி.பி., வளர்ச்சி 22.2 சதவீதமாக உள்ளது.
இந்த நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் உற்பத்தித் துறை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 49.6 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது.

கடந்த ஆண்டில் விவசாயத் துறை பெரிய அளவில் பாதிப்பு அடையவில்லை என்றாலும், கடந்த காலாண்டிலும் நல்ல வளர்ச்சியைக் எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. மின்சாரப் பயன்பாடு, போக்குவரத்து, ஜி.எஸ்.டி., வசூல், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டு அளவு ஆகிய அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கியக் காரணி யாக அமைந்துள்ளது.


எட்டவில்லை



பங்குச் சந்தை குறியீடுகள் உயரத் துவங்கியுள்ளன. கட்டுமானத் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 50 சதவீத சரிவை சந்தித்தது. ஆனால் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 68.3 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. மத்திய அரசின் ஆதரவாளர்கள் இந்த வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நிர்வாகமே காரணம் என கூறுகின்றனர். எனினும், இந்த வளர்ச்சி தொடருமா என்ற சந்தேகத்தையும், பொருளாதார நிபுணர்கள் சிலர் எழுப்பியுள்ளனர்.
ஏனெனில் கொரோனா பரவலுக்கு முன் 2019ல் இருந்த வளர்ச்சியை விட நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் விவசாயத்துறையும், மின்சாரத்துறையும் தான்அதிக வளர்ச்சியை அடைந்து உள்ளன.

உற்பத்தி துறை 2019ன் முதல் காலாண்டில் இருந்த வளர்ச்சியை விட கடந்த காலாண்டில் 17 சதவீதம் குறைவாகவே உள்ளது. இப்படி பல துறைகளிலும் 2019ல் இருந்த வளர்ச்சியை விட குறைவாகவே உள்ளது.அதனால் நாட்டின் பொருளாதாரம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புஇருந்த நிலையை எட்டவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.




நம்பிக்கை



கொரோனா இரண்டாவது அலை பரவாமல் இருந்திருந்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருந்திருக்கும்.அதேநேரத்தில் மூன்றா வது அலை பரவினால் இப்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் மாபெரும் சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளது. அத்தகைய சரிவு ஏற்படாமல் இருக்க, இப்போதே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டியது அவசியம். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விரைவு படுத்தப்பட்டு உள்ளன. இதனால் இரண்டாம் காலாண்டில் நல்ல மாற்றம் தெரியும் என பொருளாதார நிபுணர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். - சிறப்பு நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X