செப்., 11 தாக்குதல் தினம் சோகத்தில் மூழ்கிய அமெரிக்கா

Added : செப் 11, 2021
Share
Advertisement
நியூயார்க்:அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 20வது ஆண்டு நினைவு தினத்தை, கண்ணீர், நெகிழ்ச்சி, சோகத்துடன் அமெரிக்க மக்கள் அனுசரித்தனர். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2001, செப்., 11ல் விமானங்களை கடத்தி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இரட்டை
 செப்., 11 தாக்குதல் தினம் சோகத்தில் மூழ்கிய அமெரிக்கா

நியூயார்க்:அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 20வது ஆண்டு நினைவு தினத்தை, கண்ணீர், நெகிழ்ச்சி, சோகத்துடன் அமெரிக்க மக்கள் அனுசரித்தனர்.

அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2001, செப்., 11ல் விமானங்களை கடத்தி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுர வர்த்தக மைய கட்டடத்தில் மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.வாஷிங்டனில் உள்ள ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் பென்சில்வேனியாவிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.


நினைவு தினம்

இந்த பயங்கரவாத சம்பவங்களில் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான போரை அமெரிக்கா துவக்கியது. தாக்குதல் நடத்திய அல் - குவைதா தலைவர் ஒசாமா பின் லேடன் மற்றும் அந்த இயக்கத்தினருக்கு எதிரான வேட்டையை துவங்கியது. அதில், ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டார். அல் - குவைதாவுக்கு ஆதரவு அளித்த தலிபான்களை ஒடுக்குவதற்காக தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் களமிறங்கின.

தற்போது, 20வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பியுள்ளன. தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். கடந்த 2001 தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தார், தாக்குதலில் தப்பியோர், தங்களுடைய நினைவுகளை தற்போது பகிர்ந்துள்ளனர். அனைவரும் கண்ணீருடன் நெகிழ்ச்சியுடனும், சோகத்துடனும் காணப்பட்டனர்.

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரட்டை கோபுரம் இருந்த பகுதியில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் பயங்கரவாதம் தொடர்வது, ஆப்கனில் மீண்டும் தலிபான்கள் ஆட்சி அமைவது, அமெரிக்கர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.பயங்கரவாத தாக்குதலின் 20வது ஆண்டையொட்டி அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நியூயார்க், வாஷிங்டன் மற்றும் பென்சில்வேனியாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில், அதிபர் ஜோ பைடன் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா, டொனால்டு டிரம்ப் ஆகியோரும் நினைவிடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.


ஒற்றுமையே பலம்!



அமெரிக்கா மீது நடந்த தாக்குதலைத் தொடர்ந்து நாம் பல பாடங்களை, அனுபவங்களை கற்றுள்ளோம். அதில் மிகவும் முக்கியமானது, ஒற்றுமையுடன் செயல்படுவது. ஒற்றுமையுடன் செயல்படுவதே, நம் மிகப் பெரிய பலம்.

ஜோ பைடன்

அமெரிக்க அதிபர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X