பொது செய்தி

இந்தியா

இந்தியா - ஆஸி., அமைச்சர்கள் பேச்சு

Added : செப் 11, 2021
Share
Advertisement
புதுடில்லி:இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக, இரு நாடுகளின் வெளியுறவு, ராணுவ அமைச்சர்கள் நேற்று பேச்சு நடத்தினர்.ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரிசி பேய்ன் மற்றும் ராணுவ துறை அமைச்சர் பீட்டர் டட்டன் ஆகியோர் நேற்று முன்தினம் இந்தியா வந்தனர். நேற்று இருவரும் டில்லியில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்
 இந்தியா - ஆஸி., அமைச்சர்கள் பேச்சு

புதுடில்லி:இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக, இரு நாடுகளின் வெளியுறவு, ராணுவ அமைச்சர்கள் நேற்று பேச்சு நடத்தினர்.

ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரிசி பேய்ன் மற்றும் ராணுவ துறை அமைச்சர் பீட்டர் டட்டன் ஆகியோர் நேற்று முன்தினம் இந்தியா வந்தனர். நேற்று இருவரும் டில்லியில், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசினர்.

இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:இது நாடுகளின் வெளியுறவு, ராணுவத் துறை அமைச்சர்கள் நடத்திய பேச்சில் ஆப்கன் விவகாரம் குறித்து ஆலோசிக்கப் பட்டது. ஆப்கனில் இருந்து பயங்கரவாதம் பரவ வாய்ப்புள்ளது குறித்து இரு நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் கவலை தெரிவித்தனர். தென் சீனக் கடலில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தென் சீனக் கடல் பகுதிக்கு எந்தவொரு தனி நாடும் உரிமை கோர முடியாது என, மரிசி பேய்ன் வலியுறுத்தினார். கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளின் ராணுவத் துறைகளில் நல்லுறவும், ஒத்துழைப்பும் மேம்பாடு அடைந்து வருவது குறித்து கூட்டத்தில் திருப்தி தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு பேச்சு குறித்து இரு நாடுகளின் வெளியுறவு, ராணுவத் துறை அமைச்சர்கள் சார்பில் இன்று கூட்டறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X