பொது செய்தி

இந்தியா

'வானத்தில் இருந்து மருந்து' புதிய திட்டம் துவக்கம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
விகாராபாத்:தெலுங்கானாவில், 'ட்ரோன்' வாயிலாக மருந்து வினியோகம் செய்யும், 'வானத்தில் இருந்து மருந்து' என்ற திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கு தடுப்பூசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வினியோகம் செய்வதற்காக, வானத்தில் இருந்து மருந்து என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுஇருந்தது. பரிசோதனைஇந்த திட்டத்தின்
 'வானத்தில் இருந்து மருந்து' புதிய திட்டம் துவக்கம்

விகாராபாத்:தெலுங்கானாவில், 'ட்ரோன்' வாயிலாக மருந்து வினியோகம் செய்யும், 'வானத்தில் இருந்து மருந்து' என்ற திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கு தடுப்பூசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை வினியோகம் செய்வதற்காக, வானத்தில் இருந்து மருந்து என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுஇருந்தது.


பரிசோதனை

இந்த திட்டத்தின் கீழ், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் மருந்து வினியோகம் செய்யப்படும். இந்நிலையில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கும் தெலுங்கானாவில் உள்ள 16 பசுமை மண்டல பகுதிகளில் இந்த திட்டம் துவக்கப்பட்டது.

விகாராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தெலுங்கானா மாநிலத்தில் தற்போது 16 பசுமை மண்டலங்களில் வானத்தில் இருந்து மருந்து என்ற திட்டத்தின் வாயிலாக பரிசோதனை முயற்சியாக ட்ரோன் வாயிலாக மருந்து வினியோகம் செய்யும் பணி துவக்கப்பட்டு உள்ளது.


புரட்சிகரமான நாள்

மருத்துவத் துறை, தொழில் நுட்பத் துறை, மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை இந்தப் பணியை மூன்று மாதங்களுக்கு ஆய்வு செய்யும். பின் இந்த திட்டம் நாடு முழுதும் விரிவுபடுத்தப்படும். இன்று தெலுங்கானா மாநிலத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே ஒரு புரட்சிகரமான நாள். இவ்வாறு அவர் பேசினார்.

தெலுங்கானாவில் துவக்கப்பட்டு உள்ள இந்த திட்டம், உலக பொருளாதார அமைப்பு, நிடி ஆயோக் மற்றும் 'ஹெல்த்நெட் குளோபல்' ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X