பொது செய்தி

இந்தியா

'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியின் தரவுகளை சமர்ப்பிக்க உத்தரவு

Added : செப் 11, 2021
Share
Advertisement
ஐதராபாத்:'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்க, மேலும் சில தரவுகளை, அதன் தயாரிப்பு நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு கோரி உள்ளது.நம் நாட்டில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இங்கு இந்த தடுப்பூசிகளை தயாரிக்க ஏழு இந்திய நிறுவனங்களுடன், ரஷ்ய நேரடி முதலீடு நிதியம் ஒப்பந்தம்

ஐதராபாத்:'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்க, மேலும் சில தரவுகளை, அதன் தயாரிப்பு நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு கோரி உள்ளது.

நம் நாட்டில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உபயோகிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இங்கு இந்த தடுப்பூசிகளை தயாரிக்க ஏழு இந்திய நிறுவனங்களுடன், ரஷ்ய நேரடி முதலீடு நிதியம் ஒப்பந்தம் செய்து உள்ளது.

இதையடுத்து, ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் - வி தடுப்பூசிகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் பணிகள் துவங்கப்பட்டன. இந்த தடுப்பூசியை, தெலுங்கானா தலைநகர் ஐதராபாதை தலைமையிடமாக வைத்து இயங்கும் 'டாக்டர் ரெட்டிஸ் லேபாரட்டரீஸ்' நிறுவனம் வினியோகித்து வருகிறது.

இந்த ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்தும் தடுப்பூசிகளின் பட்டியலில் இணைக்கக் கோரி, உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பம் செய்யப்பட்டு இருந்தது.இந்நிலையில், அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த உலக சுகாதார அமைப்பு, ஸ்புட்னிக் - வி தடுப்பூசி குறித்த மேலும் சில தரவுகளை சமர்ப்பிக்கக் கோரி, அதன் தயாரிப்பு நிறுவனமான, 'கமாலியா' தேசிய ஆராய்ச்சி நிறுவனத் திடம் கேட்டுள்ளது.

'அனைத்து தரவுகளும் சமர்ப்பிக்கப்பட்ட பின்பே இதில் இறுதி முடிவு எடுக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X