அதிகாரிக்கு கட்டாய விடுமுறை கர்னால் போராட்டம் 'வாபஸ்'

Added : செப் 11, 2021
Share
Advertisement
கர்னால்:ஹரியானா மாநிலம் கர்னாலில் சர்ச்சைக்குஉரிய வகையில் பேசிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதை அடுத்து, ஒரு வாரமாக நடந்த போராட்டத்தை விவசாய சங்கங்கள் 'வாபஸ்' பெற்றன.ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின்
 அதிகாரிக்கு கட்டாய விடுமுறை கர்னால் போராட்டம் 'வாபஸ்'

கர்னால்:ஹரியானா மாநிலம் கர்னாலில் சர்ச்சைக்குஉரிய வகையில் பேசிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதை அடுத்து, ஒரு வாரமாக நடந்த போராட்டத்தை விவசாய சங்கங்கள் 'வாபஸ்' பெற்றன.

ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லையில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் விவசாய அமைப்புகளை சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்னாலில் சமீபத்தில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்வரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.தடையை மீறி பேரணியாக வந்த விவசாயிகளை தடியடி நடத்தி போலீசார் விரட்டி அடித்தனர்.

அப்போது, 'விவசாயிகளின் மண்டையை அடித்து உடையுங்கள்' என, துணை கலெக்டர் ஆயுஷ் சின்ஹா உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கர்னால் துணை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு வாரத்துக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

விவசாய சங்கங்களுடன் மாநில அரசு பேச்சு நடத்தியது. 'இந்தப் பிரச்னை தொடர்பாக முன்னாள் நீதிபதி தலைமையில் ஒரு மாதத்துக்குள் விசாரணை நடத்தப்படும்' என, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விசாரணை நடக்கும் வரையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆயுஷ் சின்ஹாவை ஒரு மாத விடுமுறையில் செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது.இதையடுத்து விவசாய சங்கங்கள் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X