சில வரி செய்திகள்...: இந்தியா

Added : செப் 11, 2021
Share
Advertisement
முதியவருக்கு சிறைதானே: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம் மும்புராவைச் சேர்ந்த ஒரு தம்பதி, 2014ம் ஆண்டு தங்கள் இரு பெண் குழந்தைகளை, அருகில் வசித்த தங்கள் கிராமத்தைச் சேர்ந்த, 49 வயது நபரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றனர். அவர்கள் திரும்பி வந்தபோது இரண்டரை வயது சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 'போக்சோ' வழக்கில் கைதான அவருக்கு, தானே நீதிமன்றம் 10

முதியவருக்கு சிறை

தானே: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம் மும்புராவைச் சேர்ந்த ஒரு தம்பதி, 2014ம் ஆண்டு தங்கள் இரு பெண் குழந்தைகளை, அருகில் வசித்த தங்கள் கிராமத்தைச் சேர்ந்த, 49 வயது நபரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றனர். அவர்கள் திரும்பி வந்தபோது இரண்டரை வயது சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. 'போக்சோ' வழக்கில் கைதான அவருக்கு, தானே நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

4வது குற்றப் பத்திரிகை

கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து நடந்த வன்முறைகள் தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இதுவரை 34 வழக்குகள் பதிவு செய்ததுடன், மூன்று குற்றப் பத்திரிகைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அடுத்ததாக திரிணமுல் காங்., கட்சியினரால் பா.ஜ., தொண்டர் கொல்லப்பட்ட வழக்கில், நதியா மாவட்டம் கிருஷ்ணா நகர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் நான்காவது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

சுற்றுலா கிராம விருது

போபால்: ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு சார்பில், சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலா கிராமங்களுக்கு விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டு விருதுக்காக மத்திய பிரதேசத்தின் நிவாரி மாவட்டத்தில் உள்ள லத்புரா காஸ் கிராமத்தை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது. அதேபோல் மேகாலயா மற்றும் தெலுங்கானாவில் உள்ள இரு கிராமங்களும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாம்புகளுடன் ஒருவர் கைது

தானே: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம் கம்பல்படா பகுதியில் மண்ணுளி பாம்பு பதுக்கி வைத்து விற்கப்படுவதான தகவலை தொடர்ந்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சுஜித் மோகன் கமண்ட்லி என்பவரிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ளஇரு பாம்புகள் கைப்பற்றப்பட்டன. இந்த பாம்பு கள் வாயிலாக, சில மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

விமானங்கள் ரத்து

புதுடில்லி: டில்லியில் பெய்த கன மழையால் விமான நிலையம் முன் தண்ணீர் தேங்கியது. இதில் வாகனங்கள் செல்ல முடியாமல் தடுமாறின. விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உத்தரவின்படி, தேங்கியிருந்த தண்ணீர் உடனடியாக அகற்றப் பட்டது.

ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியதால் நான்கு உள்நாட்டு விமானங்கள் ஜெய்ப்பூருக்கும், ஒரு சர்வதேச விமானம் ஆமதாபாதிற்கும் திருப்பி விடப்பட்டன. டில்லியிலிருந்து புறப்பட வேண்டிய மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

போலி சான்று: 12 பேர் கைது

புரி: ஒடிசாவின் புரியில் பிரசித்தி பெற்ற ஜெகனாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பாதிப்பில்லா சான்று வைத்திருப்பது அவசியம். இதையடுத்து, பக்தர்களிடம் அதிக பணம் பெற்றுக்கொண்டு, சிலர் போலி ஆர்.டி.பி.சி.ஆர்., கொரோனா பரிசோதனை சான்று வழங்கி மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 12 பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X