பனாரஸ் ஹிந்து பல்கலையில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை

Updated : செப் 13, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (13) | |
Advertisement
ஆமதாபாத் : ''இந்தியாவின் மகாகவி பாரதியாரின் 100வது நினைவு தினத்தை அனுஷ்டித்து வருகிறோம். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலையில், சுப்ரமணிய பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.குஜராத் மாநிலம் ஆமதாபாதில், 'விஸ்வ பட்டிதார் சமாஜ்' அமைப்பு சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும்
பனாரஸ் ஹிந்து பல்கலை, பாரதியார் , தமிழ் இருக்கை! மோடி அறிவிப்பு

ஆமதாபாத் : ''இந்தியாவின் மகாகவி பாரதியாரின் 100வது நினைவு தினத்தை அனுஷ்டித்து வருகிறோம். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலையில், சுப்ரமணிய பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாதில், 'விஸ்வ பட்டிதார் சமாஜ்' அமைப்பு சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் தங்குவதற்காகவும், வேலைவாய்ப்புகளுக்கான பயிற்சியளிக்கவும், 'சர்தார்தாம் பவன்' என்ற பெயரில் பிரமாண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது.


உலக அரங்கில் அறிமுகம்இதை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று திறந்து வைத்த பிரதமர் மோடி, பெண்கள் விடுதி கட்டுவதற்கான அடிக்கல்லையும் நாட்டினார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உலக வரலாற்றில் செப்., 11ம் தேதி, மனித இனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தினமாக அறியப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் தான் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுர
கட்டடத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது.ஒட்டுமொத்த உலகத்துக்கும் மனிதநேய பண்புகளை அதிகம் கற்றுக் கொடுத்தது இந்த நாள் தான். ஒரு நுாற்றாண்டுக்கு முன், 1893 செப்., 11ல் உலக மதங்களின் மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் நடந்தது.இதில் பங்கேற்ற சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் மனிதநேய மதிப்புகளை, பண்புகளை, கலாசாரத்தை உலக அரங்கில் அறிமுகப்படுத்தினார்.


மனிதநேய ஒற்றுமைமனிதநேயங்கள், சிறந்த பண்புகள் மூலமாக மட்டுமே செப்., 11 போன்ற கொடூர சோகங்களுக்கு தீர்வு ஏற்படும் என, உலகம் இப்போது உணர்ந்துள்ளது. மனிதநேய விஷயத்தில் உலகுக்கே வழிகாட்டியது இந்தியா தான் என நாம் பெருமை கொள்ளலாம்.செப்., 11ல் மற்றொரு பெரிய நிகழ்வும் உள்ளது. இந்தியாவின் மகாகவி, தத்துவ அறிஞர், சுதந்திர போராட்ட வீரர் பாரதியாரின் நினைவு தினம். அவர் மறைந்த 100வது நினைவு தினத்தை, நாம் இப்போது அனுஷ்டித்து வருகிறோம்.'ஒரே பாரதம்; உன்னத பாரதம்' என்ற தத்துவம், மகாகவி பாரதியாரின் தமிழ் எழுத்துக்களில் முழு தெய்வீகத்துடன் ஜொலிக்கிறது. பாரதியார், சுவாமி விவேகானந்தரிடம் இருந்து ஊக்கம் பெற்றார். மகான் அரவிந்தரால் ஈர்க்கப்பட்டார். மனிதநேய ஒற்றுமை மற்றும் பாரத ஒற்றுமைக்கு பாரதியார் முக்கியத்துவம் அளித்தார். அவரது கொள்கைகள் இந்தியாவின் சிந்தனை மற்றும் தத்துவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.


கூட்டு முயற்சிகாசியில் பாரதியார் வாழ்ந்தபோது தன் சிந்தனைகளுக்கு புதிய வழிகாட்டுதல்களையும், சக்தியையும் அளித்தார். இதை நினைவுபடுத்தும் வகையில், காசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில், பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும். தமிழ் படிக்கவும், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும், பாரதியார் பெயரிலான இருக்கை பயன்படும். உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலகின் குருவாக பாரதம் திகழ வேண்டும் என்ற பாரதியாரின் கனவை, நாம் நனவாக்க வேண்டும்.பழங்காலம் முதல் இன்று வரை கூட்டு முயற்சிகளின் இடமாக குஜராத் இருந்து வருகிறது. இங்கிருந்து தான் தண்டி யாத்திரையை மஹாத்மா காந்தி துவக்கினார்.குஜராத்தில் சர்தார் படேல் தலைமையில் விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் காட்டிய ஒற்றுமை, ஆங்கிலேய அரசை சரணடையச் செய்தது.


ஊக்கம் அளிக்கும் சக்திகுஜராத் மண்ணில் உள்ள சர்தார் படேலின் பிரமாண்ட ஒற்றுமை சிலை, நமக்கு ஊக்கம் அளிக்கும் சக்தியாக உள்ளது. சமூகத்தில் பின்தங்கியுள்ளவர்களை முன்னுக்கு கொண்டுவர தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஒரு புறம் தலித்துகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களின் உரிமைகளுக்கான பணிகள் நடக்கின்றன. மற்றொரு புறம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சிகள் சமூகத்தில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.எதிர்காலத்தில் திறமைகளுக்கு ஏற்ப புதிய கல்விக் கொள்கை, மாணவர்களை ஆரம்பத்திலேயே தயார்படுத்தும். திறன் இந்தியா திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான இளைஞர்கள் பல திறமைகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்று தற்சார்புடையவர்களாக மாறி வருகின்றனர்.தேசிய தொழிற்பயிற்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்ப்பதோடு, தங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.சிறப்பு அம்சம்பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகள் காரணமாக, குஜராத்தில் இப்போது பள்ளிப் படிப்பை கைவிடுவது 1 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளது.படேல் சமூகத்தினர் எங்கு சென்றாலும், தொழிலுக்கு புதிய அடையாளத்தை அளிக்கின்றனர். படேல் சமூகத்தினர் எங்கிருந்தாலும் இந்தியாவின் நலன் தான் அவர்களுக்கு அதி முக்கியம் என்பது மற்றொரு சிறப்பு அம்சம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


பொருளாதார மீட்சிஆமதாபாதில் சர்தார்தாம் பவன் கட்டடத்தை திறந்து வைத்து, பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:கொரோனா பெருந்தொற்று, இந்தியா மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது. உலகின் பொருளாதாரமே சரிவை சந்தித்தது. பெருந்தொற்று காலத்தில் மிகப் பெரிய பொருளாதார நாடுகளே தங்களை தற்காத்துக் கொள்வதில் கவனம் செலுத்திய போது, நாம் சீர்திருத்தங்களை மேற்கொண்டோம். அதனால் தான், நம் பொருளாதாரம் கொரோனா காலத்தில் தேக்கம் அடைந்ததை காட்டிலும் வேகமாக மீண்டெழுந்து உள்ளது.


உலகளாவிய வினியோக சங்கிலியில் தடை ஏற்பட்டபோது நிலைமையை இந்தியாவுக்கு சாதகமாக மாற்ற, உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டதை துவக்கினோம். ஜவுளித் துறையில் சமீபத்தில் துவக்கப்பட்ட உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டம், சூரத் போன்ற நகரங்களுக்கு மிகவும் பயனளிக்கும். இந்தியாவில் தற்போது வாய்ப்புகளுக்கு பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva Ramaswami - Columbus, Ohio,யூ.எஸ்.ஏ
12-செப்-202117:03:15 IST Report Abuse
Siva Ramaswami தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி வரட்டும். பின்னர் காண்போம் அவர்கள் தமிழ்ப் பாசம்
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
12-செப்-202114:05:54 IST Report Abuse
vpurushothaman பொருத்தானவருக்குப் பொருத்தமான செயலைப் பொருத்தமானவர் செய்கிறார். பாராட்டுவோம் - வாழ்த்துவோம் - நன்றி தெரிவிப்போம்.
Rate this:
Cancel
12-செப்-202113:40:25 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் அலுவல் மொழியாக அறிவிப்பதில் என்ன சிக்கல்? அனைத்து மாநிலங்களிலும் மொழிபெயர்ப்பாளர்களை நியமித்தால் அனைத்தும் சுமுகமாக முடியும். குறிப்பாக உச்ச நீதிமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் முதலில் துவக்கலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X