குவாரியை சுற்றி வேலி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : செப் 11, 2021
Share
Advertisement
சென்னை:குத்தகை காலம் முடிந்த பின், குவாரியை சுற்றி வேலி அமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை, குத்தகைதாரர் மேற்கொள்வதை உறுதி செய்ய, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தும்படி, தலைமை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில், பள்ளிக்குப்பம் கிராமம் உள்ளது. இங்குள்ள குவாரியை, தனியார் நிறுவனம் குத்தகைக்கு

சென்னை:குத்தகை காலம் முடிந்த பின், குவாரியை சுற்றி வேலி அமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை, குத்தகைதாரர் மேற்கொள்வதை உறுதி செய்ய, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தும்படி, தலைமை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில், பள்ளிக்குப்பம் கிராமம் உள்ளது. இங்குள்ள குவாரியை, தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்திருந்தது. குத்தகை காலம் முடிந்ததும் குவாரி இயங்கவில்லை.பாதுகாப்பு நடவடிக்கைகுவாரியில் தண்ணீர் தேங்கி இருந்தது. அதில் இறங்கி குளித்த, இரண்டு சிறுவர்கள் பலியாகினர். 2017 மே மாதம் சம்பவம் நடந்தது.

சிறுவர்களின் குடும்பங்களுக்கு, தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன், விசாரணைக்கு வந்தது. இருவர் சார்பிலும், வழக்கறிஞர் அனில் சந்தீப், அரசு தரப்பில் வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகினர்.

மனுக்களை விசாரித்த, நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவு:தனியார் நிறுவனத்துக்கு குவாரி குத்தகைக்கு விடப்பட்டது. பல அடி ஆழத்துக்கு மணல் எடுக்கப்பட்டது. குத்தகை காலம் முடிந்த பின், அந்த இடத்தை சுற்றி வேலி அமைக்கப்படவில்லை; எச்சரிக்கை அறிவிப்பும் வைக்கப்படவில்லை.

குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ளவில்லை என நிறுவனத்திடம், அரசும் கேள்வி கேட்கவில்லை.மழை காலத்தில் தண்ணீர் தேங்கி, குட்டை போல் காட்சி அளிக்கிறது. எந்த எச்சரிக்கை அறிவிப்பும் இல்லாததால், குட்டையில் இறங்கி சிறுவர்கள் குளித்துள்ளனர்; நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்புக்கு அரசும் காரணம். அதற்கு, இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

குத்தகை நிறுவனம், 'டிபாசிட்' செய்திருந்த 25.31 லட்சம் ரூபாயை மாவட்ட நிர்வாகம் வைத்து உள்ளது. வேலி அமைக்காததால், இந்த தொகையை திருப்பி கொடுக்கவில்லை. அதிலிருந்து, குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கையை, நிறுவனம் மேற்கொள்ளாதது உறுதியாகிறது.

சிலரின் கவனக்குறைவால் இந்த உயிரிழப்பு நடந்துள்ளது. எதிர்பாராத மரணத்தால், அந்த குடும்பத்தினர் நிலைகுலைந்து போய் விடுவர். இழப்பீடு அளிப்பதால், போன உயிர் திரும்பி விடாது. இருந்தாலும், காயம்பட்ட இதயத்துக்கு மருந்து போலாகும்.எனவே, 'டிபாசிட்' செய்திருந்த 25.31 லட்சம் ரூபாய், அதற்கான வட்டி தொகையை சேர்த்து, இரண்டு குடும்பத்தினருக்கும் சரி சமமாக பிரித்து, நான்கு வாரங்களில் வழங்கும்படி, வேலுார் கலெக்டருக்கு உத்தரவிடப்படுகிறது.


உத்தரவு

ஏற்கனவே வழங்கப்பட்ட, தலா 50 ஆயிரம் ரூபாயை, இதில் கழித்து கொள்ளக் கூடாது.அசம்பாவிதம் ஏதும் எதிர்காலங்களில் நேராமல் தடுக்க, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை, குத்தகைதாரர் மேற்கொள்வதை, மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகள் உறுதி செய்யும்படி, உரிய உத்தரவுகளை தலைமை செயலர் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X