அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் பணி தேர்வு வயது வரம்பு நீக்கப்படுமா?

Added : செப் 11, 2021
Share
Advertisement
சென்னை:'முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், வயது வரம்பை அரசு நீக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:அரசு பள்ளிகளில், 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆனால், 40 வயதை கடந்த பட்டதாரிகள், இதில் பங்கேற்க முடியாது என்று கூறியிருப்பது பெரும் ஏமாற்றம்

சென்னை:'முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், வயது வரம்பை அரசு நீக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:அரசு பள்ளிகளில், 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆனால், 40 வயதை கடந்த பட்டதாரிகள், இதில் பங்கேற்க முடியாது என்று கூறியிருப்பது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழகத்தில் கடைசியாக 2019ல், 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதில், ஆசிரியர் தேர்வு வாரியம் செய்த தவறுகளை திருத்தும்படி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும், தவறுகள் களையப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பட்டதாரிகள், அடுத்த தேர்விலாவது வெற்றி பெற்று, வேலைக்கு செல்ல வேண்டும் என ஏங்கும் நேரத்தில், இந்த அறிவிப்பு வந்துள்ளது. அப்பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருப்பது, பெரும்பான்மையான பட்டதாரிகளின், ஆசிரியர் பணி கனவை தகர்த்திருக்கிறது.தமிழகத்தை பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.

ஆசிரியர்களுக்கான ஓய்வு பெறும் வயது, 60 ஆக்கப்பட்டுள்ள நிலையில் 59 வயது நிறைவடையாத, உரிய கல்வித்தகுதி பெற்றுள்ள அனைவரும், இந்தப் போட்டித் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படுவது தான் நியாயமானது.ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க வேண்டும். ஓராண்டு பணி செய்யும் தகுதி உடைய அனைவரும், ஆசிரியர் பணி போட்டித் தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X