அரசியல் செய்தி

தமிழ்நாடு

மகாகவி நாள்: முதல்வர் மரியாதை

Added : செப் 11, 2021
Share
Advertisement
சென்னை:'மகாகவி நாளை' ஒட்டி, பாரதியார் படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மகாகவி பாரதியாரின் நுாற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவு நாளான செப்., ௧௧ம் தேதி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என, முதல்வர் அறிவித்தார். அதன்படி நேற்று மகாகவி நாள் கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு

சென்னை:'மகாகவி நாளை' ஒட்டி, பாரதியார் படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மகாகவி பாரதியாரின் நுாற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவு நாளான செப்., ௧௧ம் தேதி மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என, முதல்வர் அறிவித்தார். அதன்படி நேற்று மகாகவி நாள் கடைப்பிடிக்கப்பட்டது. சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு அருகில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன், சேகர்பாபு, எம்.பி.,க்கள் கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X