சென்னை:தமிழக மின் வாரியத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனால், 500 இளநிலை உதவியாளர் கணக்கு; 600 உதவி பொறியாளர்; 1,300 கணக்கீட்டாளர்; 2,900 கள உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய, முந்தைய ஆட்சியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கொரோனா ஊரடங்கால், மேற்கண்ட பதவிகளுக்கு திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், மின் வாரியத்தில் ஆட்கள் தேர்வு குறித்து புதிய அறிவிப்பு வரும் என்ற தகவல் வெளியானது. இது தொடர்பான அறிவிப்பு, சட்டசபையில், எரிசக்தி துறை மானிய கோரிக்கையின் போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.
எனவே, வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு, மின் வாரிய ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மின் வாரிய நிதி நிலைமை மோசமாக உள்ளது. எனவே, நிதி நிலைக்கு ஏற்ப விரைவில் முடிவெடுக்கப்படும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE