சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விமானத்தில் கடத்திய 3 கிலோ தங்கம் பறிமுதல்

Added : செப் 11, 2021
Share
Advertisement
சென்னை:ஒயருக்குள் மறைத்து, 1.33 கோடி ரூபாய் மதிப்பிலான 3.125 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவரை, சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம், சென்னைக்கு நேற்று முன்தினம் வந்தது.அதில் வந்த பயணியரில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக, வருவாய் புலனாய்வு பிரிவினரிடமிருந்து, சென்னை சுங்கத்
  விமானத்தில் கடத்திய 3 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை:ஒயருக்குள் மறைத்து, 1.33 கோடி ரூபாய் மதிப்பிலான 3.125 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவரை, சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம், சென்னைக்கு நேற்று முன்தினம் வந்தது.அதில் வந்த பயணியரில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக, வருவாய் புலனாய்வு பிரிவினரிடமிருந்து, சென்னை சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, 35 வயது மதிக்கத்தக்க இருவர், சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில், விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், உைடமைகளை சோதனை செய்தனர்.அதில், அவர்களது சூட்கேசில் தங்கத்தின் மீது சில்வர் முலாம் பூசி, அதை 11 ஒயர்களாக மாற்றி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை ஆய்வு செய்ததில், 3.125 கிலோ சுத்த தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு 1.33 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X