மேற்படிப்பு படிக்க ஐ.ஏ.எஸ்.,களுக்கு உதவி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேற்படிப்பு படிக்க ஐ.ஏ.எஸ்.,களுக்கு உதவி

Added : செப் 11, 2021
Share
சென்னை:அகில இந்திய குடிமை பணியாளர்களுக்கு, மேற்படிப்பு படிக்க ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, அனைத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும், உள்துறை மற்றும் வனத் துறைக்கும், தலைமை செயலர் இறையன்பு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:மத்திய அரசு பணியாளர்கள் மேற்படிப்பு படிக்க, ஒரு முறை ஊக்கத்தொகை வழங்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது, அகில

சென்னை:அகில இந்திய குடிமை பணியாளர்களுக்கு, மேற்படிப்பு படிக்க ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அனைத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும், உள்துறை மற்றும் வனத் துறைக்கும், தலைமை செயலர் இறையன்பு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:மத்திய அரசு பணியாளர்கள் மேற்படிப்பு படிக்க, ஒரு முறை ஊக்கத்தொகை வழங்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது, அகில இந்திய குடிமை பணியாளர்களுக்கும் பொருந்தும்.அதன்படி, பிஎச்.டி., படிக்க 30 ஆயிரம் ரூபாய்; ஓராண்டுக்கு மேற்பட்ட முதுநிலை பட்டம் மற்றும் பட்டயப் படிப்புக்கு 25 ஆயிரம்; ஓராண்டுக்கு உட்பட்ட முதுநிலை பட்டம் மற்றும் பட்டயத்திற்கு 20 ஆயிரம்; மூன்றாண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மூன்றாண்டுக்கு குறைவான பட்டம் மற்றும் பட்டயப் படிப்புக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X