சுற்றுச்சூழல் அமைச்சக ஆணை | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சுற்றுச்சூழல் அமைச்சக ஆணை

Added : செப் 11, 2021
Share
சென்னை:கடலோர ஒழுங்குமுறை மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு, பின் அனுமதி பெறுவது தொடர்பாக, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய - மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தென்னிந்திய மீனவர் நல சங்கத் தலைவர் கே.பாரதி தாக்கல் செய்த மனு:கடலோர சுற்றுச் சூழல் மற்றும் மீனவர்

சென்னை:கடலோர ஒழுங்குமுறை மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு, பின் அனுமதி பெறுவது தொடர்பாக, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய - மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்னிந்திய மீனவர் நல சங்கத் தலைவர் கே.பாரதி தாக்கல் செய்த மனு:கடலோர சுற்றுச் சூழல் மற்றும் மீனவர் வாழ்வாதாரங்களை பாதுகாக்க, ௨௦௧௧ம் ஆண்டில் அறிவிப்பாணை, கடலோர ஒழுங்குமுறை மண்டலம் வெளியிட்டது. இதன் நோக்கத்தை அழிக்கும் விதமாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 2021 பிப்ரவரியில் ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளது.

ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணைப்படி, திட்டங்களுக்கு முன்கூட்டி ஒப்புதல் பெறப்பட வேண்டும். 2018ல், மத்திய அரசு அறிமுகப்படுத்திய திருத்தத்தின்படி, முன்கூட்டி ஒப்புதல் பெறாமல் கட்டுமானம் துவங்கிவிட்டால், மூன்று மாதங்களுக்குள் வரன்முறை செய்ய வேண்டும்.

தற்போது, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு, அனுமதியின்றி கட்டுமானம் துவங்கப்பட்ட திட்டங்களுக்கு மட்டுமின்றி, இயங்க துவங்கிய திட்டங்களுக்கும் பொருந்தும். மேலும், வரன்முறைக்கும் கால அவகாசம் நிர்ணயிக்கவில்லை.கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணைக்கு முரணாக, மத்திய அரசு உத்தரவு உள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வர தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு பிறப்பித்த உத்தரவு:

'திட்டங்களுக்கு முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும் என்பதை, நீர்த்து போகும் விதத்தில், பின் அனுமதி பெற்றுக் கொள்ள அனுமதித்தால், கடலோர மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக அமையும்' என மனுதாரர் கூறுவதற்கு, போதிய அடிப்படை உள்ளது.

இவ்வழக்கில், மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்க, வழக்கறிஞர் பாபு, தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க, அரசு பிளீடர் பி.முத்துக்குமார், 'நோட்டீஸ்' பெற்றனர். மூன்று வாரங்களுக்குள், மத்திய - மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், மத்திய அரசு குறித்த நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, அக்., 21க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X