லோக் அதாலத் ரூ.330 கோடிக்கு தீர்வு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'லோக் அதாலத்' ரூ.330 கோடிக்கு தீர்வு

Added : செப் 11, 2021
Share
சென்னை:தமிழகம் முழுதும் நேற்று நடந்த, மக்கள் நீதிமன்றம் எனும், 'லோக் அதாலத்' வாயிலாக, 330 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு நிர்வாக தலைவர், நீதிபதி லலித் உத்தரவின்படி, அனைத்து மாநிலங்களிலும், நேற்று லோக் அதாலத் நடந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் தணிகாசலம், மலை சுப்ரமணியம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில்

சென்னை:தமிழகம் முழுதும் நேற்று நடந்த, மக்கள் நீதிமன்றம் எனும், 'லோக் அதாலத்' வாயிலாக, 330 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு நிர்வாக தலைவர், நீதிபதி லலித் உத்தரவின்படி, அனைத்து மாநிலங்களிலும், நேற்று லோக் அதாலத் நடந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற நீதிபதிகள் தணிகாசலம், மலை சுப்ரமணியம், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் தலைமையில் மூன்று அமர்வுகள்; மதுரை கிளையில், நீதிபதிகள் ஆனந்தி, முரளி சங்கர் தலைமையில், இரண்டு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.

மாவட்ட மற்றும் மாநில சட்ட பணிகள் ஆணைகுழு சார்பில்,380 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. காசோலை மோசடி வழக்கு, விபத்து வழக்கு, திருமணம் சம்பந்தமான வழக்கு, சிவில் வழக்குகள் என, 41 ஆயிரத்து, 517 வழக்குகளில், 330.83 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. இத்தகவலை, மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் கே.ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X