பொது செய்தி

தமிழ்நாடு

'மூன்றாவது மனைவியை காதலித்த கருணாநிதி'

Added : செப் 11, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை:''மூன்றாவது மனைவியான சினிமாவைத் தான் கருணாநிதி அதிகம் நேசித்தார்,'' என, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.அந்தோணிசாமி இயக்கிஉள்ள சாயம் படத்தில் விஜய் விஷ்வா, சைனி, பொன்வண்ணன், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படிக்கும் மாணவர்கள் மீது ஜாதி சாயம் பூசுவதால் அவர்கள் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதை மையமாக வைத்து இப்படத்தை
 'மூன்றாவது மனைவியை  காதலித்த கருணாநிதி'

சென்னை:''மூன்றாவது மனைவியான சினிமாவைத் தான் கருணாநிதி அதிகம் நேசித்தார்,'' என, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.

அந்தோணிசாமி இயக்கிஉள்ள சாயம் படத்தில் விஜய் விஷ்வா, சைனி, பொன்வண்ணன், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படிக்கும் மாணவர்கள் மீது ஜாதி சாயம் பூசுவதால் அவர்கள் வாழ்க்கை எப்படி திசை மாறுகிறது என்பதை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

படத்தின் இசை வெளி யீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில், திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:என் மகன் விஜயை பள்ளியில் சேர்க்கும் போது ஜாதியை குறிப்பிட வேண்டிய இடத்தில், 'தமிழன்' என்றே குறிப்பிட்டேன்; முதலில் அதை ஏற்க மறுத்தனர். பள்ளியை மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என்றேன்; பின்னர், விண்ணப்பத்தை ஏற்றனர்.

பள்ளியில் சேர்க்கும் போதே ஜாதியை தவிர்த்தால், அடுத்த 20 ஆண்டுகளில் ஜாதியே இல்லாமல் போய் விடும். சிறிய பட்ஜெட் படங்களுக்காக, 'கலைஞர் தியேட்டர்' என்ற திட்டத்தை அமல்படுத்தினால், நல்ல படங்கள் அதிகம் வரும். இத்திட்டத்தை, கருணாநிதி இருக்கும் போதே செய்ய நினைத்தோம்; அவரும் ஆசைப்பட்டார்.

கருணாநிதிக்கு இரண்டு மனைவியர் என்று தான் கேள்விப்பட்டு உள்ளோம். ஆனால், அவருக்கு மூன்றாவது மனைவியும் உண்டு; அது தான் சினிமா. சினிமாவை அந்தளவு காதலித்தார்; கடைசி மூச்சு வரை எழுதிக் கொண்டே இருந்தார்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
18-செப்-202112:18:42 IST Report Abuse
Matt P ஒருவனுக்கு ஒருத்தி என்று உறவு கண்டோம் தமிழ்நாட்டிலே என்று பாடி கொண்டே , தமிழ் இந தலைவர் இரண்டு பொண்டாட்டி கட்டியவர் கலாச்சாரத்தை மீறியவர் என்று மறை முகமாக தாக்கி இருக்க வேண்டாம்.
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
14-செப்-202115:31:21 IST Report Abuse
திரு.திருராம் \\\\\\\\\\\\\\பள்ளியில் சேர்க்கும் போதே ஜாதியை தவிர்த்தால், அடுத்த 20 ஆண்டுகளில் ஜாதியே இல்லாமல் போய் விடும்\\\\\\\\\\\\\\வாழ்நாளில் சொன்னதிலேயே உருப்படியான விசயம், ஆனால் நடக்குமா? இடஒதுக்கீடு சமூவநீதி எல்லாம் எப்படி காப்பீங்க?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-செப்-202102:19:11 IST Report Abuse
Bhaskaran அவருக்கு எழுத்து மேல் அதிக பிரியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X