குஜராத் முதல்வர் விஜய் ரூபானி...ராஜினாமா!

Updated : செப் 12, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (24) | |
Advertisement
ஆமதாபாத் : குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, 65, நேற்று தன் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை அடுத்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இங்குஅடுத்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பா.ஜ., மேலிடத்தின் இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தில் 1998ல் கேஷுபாய் படேல் தலைமையிலான பா.ஜ., அரசு
குஜராத் முதல்வர், விஜய் ரூபானி,.ராஜினாமா!

ஆமதாபாத் : குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, 65, நேற்று தன் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை அடுத்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இங்குஅடுத்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பா.ஜ., மேலிடத்தின் இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் 1998ல் கேஷுபாய் படேல் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்தது. தொடர்ந்து பா.ஜ.,வே அங்கு ஆட்சி அமைத்து வருகிறது.

பிரதமராவதற்கு முன், நரேந்திர மோடி 12 ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்தார். அவருக்குப் பின், ஆனந்தி பென் படேல் 2014ல் முதல்வரானார். சட்டசபைக்கு தேர்தல் நடப்பதற்கு முன், 2016ல் விஜய் ரூபானி முதல்வராக நியமிக்கப்பட்டார். கடந்த 2017 தேர்தலில் அவரது தலைமையில் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தது.அந்த தேர்தலில், சட்டசபையில் மொத்தமுள்ள 182 இடங்களில் பா.ஜ.,வுக்கு 99 இடங்கள் கிடைத்தன. முந்தைய தேர்தலைவிட 17 இடங்கள் குறைவு. அதே நேரத்தில் காங்., முந்தைய தேர்தலைவிட 16 இடங்கள் அதிகம் பெற்று 77 தொகுதிகளில் வென்றது.


தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் அடுத்தாண்டு டிசம்பரில் முடிய உள்ளது. இந்நிலையில் முதல்வர் பதவியை விஜய் ரூபானி நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.பா.ஜ.,வின் குஜராத் மாநில பொறுப்பாளர் புபேந்திர யாதவ், மத்திய அமைச்சர்கள் புருஷோத்தம் ரூபலா, மன்சுக் மாண்டவியா, மாநில துணை முதல்வர் நிதின் படேல் உள்ளிட்டோருடன், கவர்னர் ஆச்சார்யா தேவவிரதை சந்தித்து, தன் ராஜினாமா கடிதத்தை அவர் அளித்தார்.


ஐந்து ஆண்டுகள் பணிகவர்னருடனான சந்திப்புக்குப் பின், நிருபர் களிடம் விஜய் ரூபானி கூறியதாவது:முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ளேன். ஐந்து ஆண்டுகள் முதல்வ ராக பணியாற்ற எனக்கு அனுமதி கிடைத்தது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக என் பங்களிப்பை அளித்துள்ளேன். அடுத்து கட்சி என்ன உத்தரவிடுகிறதோ அதை செய்வேன்.பொறுப்புகளை அடிக்கடி மாற்றுவது என்பது பா.ஜ.,வில் பாரம்பரியமானது.கட்சியின் தேவைக்கு ஏற்ப இவ்வாறு மாற்றம் செய்யப்படும். ஒரு சாதாரண தொண்டனான எனக்கு முதல்வர் பதவியை அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. பா.ஜ.,வில் தொண்டர்களுக்கான பதவி என்பது தொடர் ஓட்டம் போலத்தான். மற்றவரிடம் பொறுப்பை கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


காராணம் என்ன?அடுத்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், முதல்வர் மாற்றப்பட்டுள்ளது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளதாவது:அரசுக்கு எதிரான மனநிலை மாநிலத்தில் பரவலாக உள்ளது. கொரோனாவை தடுப்பதில் விஜய் ரூபானி சரியாக செயல்படவில்லை என்றும் பேசப்படுகிறது.அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க வேண்டிய நிலையில் பா.ஜ., உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் ஆட்சியை தக்க வைப்பது, பா.ஜ.,வுக்கு கவுரவ பிரச்னையாக உள்ளது.

விஜய் ரூபானிக்கு மக்களிடையே பெரிய செல்வாக்கு இல்லை. கடந்த தேர்தலிலேயே மோடியின் பிரசாரத்தால் தான் பா.ஜ., தப்பி பிழைத்தது. அதனால், வரும் தேர்தலை சந்திப்பதற்காக, மக்களிடையே உள்ள அரசுக்கு எதிரான மனநிலையை மாற்றும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம்.விஜய் ரூபானி மாநில மக்கள் தொகையில் 2 சதவீதமே உள்ள ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர். மக்கள் தொகையில் பெருமளவு உள்ள படேல் சமூகத்தைச் சேர்ந்தவரை, அடுத்த முதல்வராக பா.ஜ., தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


அடுத்த முதல்வர் யார்?விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த முதல்வராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.துணை முதல்வர் நிதின் படேல், வேளாண் துறை அமைச்சர் ஆர்.சி.பால்டு, மத்திய அமைச்சர்கள் புருஷோத்தம் ரூபலா, மன்சுக் மாண்டவியா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக, பா.ஜ.,வின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று நடக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


தொடரும் அதிரடி!பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் நான்காவது முறையாக முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.ஜூலையில் கர்நாடகாவில் எடியூரப்பா மாற்றப்பட்டு, பசவராஜ் பொம்மை முதல்வராக நியமிக்கப்பட்டார்.அதற்கு முன் உத்தரகண்டில் திரிவேந்திர ராவத் மாற்றப்பட்டு தீரத் சிங் ராவத் முதல்வராக நியமிக்கப்பட்டார். நான்கே மாதங்களில் அவரும் மாற்றப்பட்டு, புஷ்கர் சிங் தாமி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். தற்போது குஜராத்தில் விஜய் ரூபானி மாற்றப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
12-செப்-202121:29:41 IST Report Abuse
Nagercoil Suresh இவருடைய பெயரில் பட்டேல் இல்லை அதினாலே இருக்குமோ?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
12-செப்-202118:00:26 IST Report Abuse
sankaseshan BJP காங்கிரஸ் மாதிரி இல்லை எதை எப்ப செய்யணும் தேர்தல் யுக்தி தெரிந்தவர்கள்
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
12-செப்-202116:03:29 IST Report Abuse
elakkumanan கந்து , இது ஒன்னும் திராவிட ஆட்சி இல்லையே ஒவொரு அஞ்சு வருசத்துக்கு அப்போரமும் பத்து, பதினைந்து வருஷம் வனவாசம் போயிட்டு வர...........தொடர்ச்சியா ஒரு முறை கூட ஜெயிக்க துப்பில்லை..........அஞ்சு முறை ஜெயித்தவனை, அதுவும் தொடர்ச்சியா ஜெயித்தவனை பார்த்து............அடேய் இருநூறு ரூவாய் பெயரில்லா கும்பலே............ போங்கடா... உண்மை பேருங்க... உண்மையா இருங்க...ஆட்சி செய்வதற்கும் ஒட்டு விலைக்கு வாங்குவதற்கும் உள்ள வித்யாசம் என்னன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...............ஒரு முறையாவது, மக்கள், தொடர்ச்சியா தேர்ந்தெடுக்க கூடிய தகுதியை வளர்த்துக்கோங்க.. அப்பொறம் பேசுங்க............நந்தவனத்திலோர் ஆண்டி மாதிரி ஆயிடாதீங்க.... ஒரு மாநிலத்திலேயே, ஆறு ஏழு மாவட்டங்களில் ஒரு சீட்டு கூட ஜெயிக்கமுடியாத ஒரு துப்பு கேட்ட நாம், இந்தியா முழுக்க பரவியிருக்கும் ஒரு கட்சியை பார்த்து சிரிப்பது, ஊராட்சி ஒன்றிய அறிவு என்றுதான் சொல்லணும்.. எல்லாரும் நூறுக்கு நூறு..............ஆனால் , நீட் வேண்டாம்.....அதுமாதிரிதான் இதுவும்................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X