தமிழ்நாடு

மாவட்ட முழுக்க இன்று முகாம்கள்: 1.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தொற்றை விரட்டியடிப்போம்!

Updated : செப் 12, 2021 | Added : செப் 11, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் இன்று, 631 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது; ஒரே நாளில், 1.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர் எண்ணிக்கை, 20 லட்சத்து, 77 ஆயிரத்து, 95 பேர் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில், 10 லட்சத்து, 58 ஆயிரத்து, 704 பேர் முதல் தவணை தடுப்பூசி
மாவட்ட முழுக்க இன்று முகாம்கள்: 1.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி: தொற்றை விரட்டியடிப்போம்!

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் இன்று, 631 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது; ஒரே நாளில், 1.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டவர் எண்ணிக்கை, 20 லட்சத்து, 77 ஆயிரத்து, 95 பேர் என கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில், 10 லட்சத்து, 58 ஆயிரத்து, 704 பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர்.
மேலும், ஒரு லட்சத்து, 98 ஆயிரத்து, 647 பேர், இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.சுகாதாரத்துறை கணக்கீட்டின்படி, 10 லட்சத்து, 18 ஆயிரத்து, 391 பேருக்கு முதல் தவணையும்; 43 ஆயிரத்து, 187 பேருக்கு, இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்த வேண்டும். சிறப்பு தடுப்பூசி முகாமில், 1.06 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.631 தடுப்பூசி மையங்கள்திருப்பூர் மாவட்டத்தில் இன்று, 631 மையங்களில், காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை, சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது. அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், சுங்கச்சாவடி மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் இன்று, சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது.
தடுப்பூசி பணியில்தன்னார்வலர்சுகாதாரத்துறை சார்பில், பல்வேறு அரசுத்துறைகளை பணியாளர்கள், தன்னார்வலர் என, 3,740 பேர், தடுப்பூசி சிறப்பு முகாம் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.ஒவ்வொரு மையத்திலும், தடுப்பூசி இணையத்தில் பதிவு செய்ய வசதியாக, தலா, இரண்டு தன்னார்வ இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மொபைல் போன் வாயிலாக, பதிவு பணியை மேற்கொள்ள உள்ளனர்.
ஆட்டோ பிரசாரம்கொரோனா தடுப்பூசி முகாம் நடப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆட்டோவில் மைக் கட்டி, முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. கிராமப்புறங்களில், 'தண்டோரா' மூலம், வீதி வீதியாக கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இன்று மதியம் வரை, தொடர்ந்து பிரசாரம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.சுழலும் பி.டி.ஓ.,க்கள்கிராமப்புற தடுப்பூசி முகாமில் கூடுதல் கவனம் செலுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளதால், பி.டி.ஓ.,க்கள் இரண்டு நாளாக களப்பணியாற்றி வருகின்றனர்.

தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்களில், 'சானிடைசர்' அடித்து சுத்தம் செய்வது, குடிநீர் வசதி, கைகளை சுத்தம் செய்யும், 'சானிடைசர்' வைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டுள்ளனர்.அத்துடன், முகாமில் பங்கேற்கும் சுகாதார பணியாளர், தன்னார்வலருக்கான உணவு உள்ளிட்ட வசதிகளையும் செய்து வருகின்றனர்.மொபைல் போன்அவசியம்கூட்ட நெரிசலை தவிர்க்க, அந்தந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு மட்டும், பள்ளி முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று நடக்கும் சிறப்பு முகாமில், யார் எங்கு வேண்டுமானாலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் அட்டையுடன் செல்ல வேண்டும். கொரோனா தடுப்பூசி பதிவுக்காக, கட்டாயம் தங்களது மொபைல் போனை எடுத்துச்செல்ல வேண்டும்.தயார்நிலையில்'ஆம்புலன்ஸ்'மாவட்டத்தில் இதுவரை, தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், யாருக்கும் எவ்வித உடல் உபாதையும் ஏற்படவில்லை. இருப்பினும், சிறப்பு முகாம் இன்று நடப்பதால், டாக்டர் குழுவுடன், அனைத்து பகுதியிலும் ஆம்புலன்ஸ் தயார்நிலையில் இருக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X