பொது செய்தி

இந்தியா

நேர்மையாக தொழில் செய்கிறோம்: 'ஆன்லைன்' செய்தி நிறுவனம் உறுதி

Updated : செப் 13, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :டில்லியில் 'நியூஸ் லாண்டரி' என்ற 'ஆன்லைன்' செய்தி நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனைக்கு பின், அதன் இணை நிறுவனர் அபிநந்தன் சேகரி, ''நாங்கள் நேர்மையுடன் தொழில் செய்கிறோம்,'' என, விளக்கம் அளித்துள்ளார்.டில்லியில் ஆன்லைன் செய்தி தளமான நியூஸ் லாண்டரி செயல்பட்டு வருகிறது. இங்கு வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக அதிகாரிகள் நேற்று முன் தினம் சோதனை
நேர்மை, தொழில் செய்கிறோம் 'ஆன்லைன்' செய்தி நிறுவனம்

புதுடில்லி :டில்லியில் 'நியூஸ் லாண்டரி' என்ற 'ஆன்லைன்' செய்தி நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனைக்கு பின், அதன் இணை நிறுவனர் அபிநந்தன் சேகரி, ''நாங்கள் நேர்மையுடன் தொழில் செய்கிறோம்,'' என, விளக்கம் அளித்துள்ளார்.

டில்லியில் ஆன்லைன் செய்தி தளமான நியூஸ் லாண்டரி செயல்பட்டு வருகிறது. இங்கு வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக அதிகாரிகள் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர். இது குறித்து நியூஸ் லாண்டரி இணை நிறுவனர் அபிநந்தன் சேகரி கூறியுள்ளதாவது:எங்கள் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சோதனை நடத்தப்பட்டது. சோதனை தொடர்பாக சட்ட ஆலோசனை பெற, வழக்கறிஞரை தொடர்புகொள்ளக்கூடாது என்றனர்.

அலுவலகத்தில் உள்ள அனைத்து 'கம்ப்யூட்டர், லேப்டாப், என் மொபைல் போன்' உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். தகவல்களை பதிவிறக்கம் செய்து கொண்டனர். எங்கள் தொழிலை நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்துகிறோம். அனைத்து தகவல்களையும் பதிவு செய்துள்ளோம். எந்த விதிமீறலிலும் பங்கேற்கவில்லை. எனவே சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.வருமான வரித் துறை நடத்திய சோதனைக்கு 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துஉள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
12-செப்-202112:53:45 IST Report Abuse
Yezdi K Damo எனக்கு மிகவும் பிடித்தமான யு டியூப் பத்திரிகை . ஆங்கிலமும் ,ஹிந்தியும் கலந்து பேசுவதால் கல் தோன்றா மண் தோன்றா காலத்து மூத்த குடிமக்களுக்கு பிடிக்காமல் போக அதிக வாய்ப்பு உண்டு . குறிப்பாக கம்பெனி ஆட்களுக்கு சுத்தமாக பிடிக்காது .
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
12-செப்-202109:02:05 IST Report Abuse
 N.Purushothaman வடநாட்டு மீசைக்கார ...பத்திரிக்கை .....
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
12-செப்-202105:38:34 IST Report Abuse
NicoleThomson எதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X