நமக்குள் இருக்கும் இன்னொரு மொழி!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நமக்குள் இருக்கும் இன்னொரு 'மொழி!'

Added : செப் 11, 2021
Share
அம்பிகா குமரன், திருப்பூரின் கவிதாயினி; தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை பொதுச்செயலாளராக, தமிழ்ப்பட்டறை இலக்கிய பேரவை சிறுவர் பூங்காவின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்; மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டிலுமே புலமை. பம்பரம் போல் சுழன்று, பயணம், கவிதை, அமைப்பு என களைப்பின்றி பணியாற்றும் இவருக்கு, சமீபத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் ஜீவா இலக்கிய
 நமக்குள் இருக்கும் இன்னொரு 'மொழி!'

அம்பிகா குமரன், திருப்பூரின் கவிதாயினி; தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை பொதுச்செயலாளராக, தமிழ்ப்பட்டறை இலக்கிய பேரவை சிறுவர் பூங்காவின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்; மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டிலுமே புலமை. பம்பரம் போல் சுழன்று, பயணம், கவிதை, அமைப்பு என களைப்பின்றி பணியாற்றும் இவருக்கு, சமீபத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் ஜீவா இலக்கிய விருது கிடைத்துள்ளது.அவரிடம் பேசியபோது...பல்லடம், மாதப்பூர் சொந்த ஊர். கட்டிக்கொடுத்தது, கொடுவாய். வீட்டிலேயே சின்னதாக டெய்லரிங் செய்கிறேன். பத்தாவது படிக்கும்போதே கவிதை எழுத ஆரம்பித்துவிட்டேன். கவிதை எழுதுவதையோ குற்றமாக பார்த்த காலம். எனது கவிதைகளை யாரிடம் காட்டாமல் வைத்திருந்தேன். சமூக ஊடகங்கள் அறிமுகம் கிடைத்த பிறகு மீண்டும் துளிர்விட்டது. கடந்த எட்டு வருடங்களாக கவிதைகளை முழு நேரமாக எழுதுகிறேன்.முதன்முதலில் விரும்பி படித்தது, 'கவிக்கோ' அப்துல் ரகுமானின் கவிதைகளைத்தான்; பாரதியார், சுரதா, மேத்தா, வைரமுத்து, தற்போதையே நவீன கால எழுத்தாளர்கள் வரை அனைவரது கவிதைகளையும் விரும்பி படிப்பேன். 'நளவெண்பா' பிடித்த நுால். கடந்த, 2016ல் மாநில அளவில் களஞ்சியம் கவிதைப்போட்டி நடந்தது. அதில் இரண்டாமிடம் கிடைத்தது. வைரமுத்துவின் கையால், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கபரிசு வாங்கியது நெகிழ்ச்சியாக இருந்தது. என்னை கவிஞராக அடையாளம் காட்டிய தருணம், அது; அதன்பின், திருப்பூர் இலக்கிய மேடை அறிமுகம் கிடைத்தது.முதல் நுால், 'வெளித்தேடும் சொற்கள்'. சென்னை உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டது. 'என்னிலிருந்து' புத்தகம் திருப்பூரில் வெளியானது. தற்போது, குறுந்தொகையில் இடம்பெற்ற, 100 அகப்பாடல்களை புதுக்கவிதையாக மாற்றி வருகிறேன். எட்டு சிறுகதைகள் எழுதியுள்ளேன். விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளேன். இப்போது, 37 வயது ஆகிறது. என்னை ஊக்குவிப்பதில் அப்பாவுக்கும், கணவருக்கும் சிறப்பிடம் உண்டு.'பிரம்மோற்சவம்' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் படம், 'அனிருத்'. இதிலும், இயக்குனர் பாரதிராஜாவின் உதவி இயக்குனர் ஜெயபிரகாஷ் வீரப்பனின் 'குச்சி ஐஸ்' எனும் நேரடி தமிழ்படத்திலும் தலா ஒரு பாட்டு எழுதியுள்ளேன். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் ஆல்பம் பாடலுக்கு பாட்டு எழுதியுள்ளேன். இது இன்றும் வெளியாகவில்லை.பெண்களின் 'பொக்கிஷம்'சமூக வலைதளம், இன்றைய பெண்களுக்கு சிறந்த தளம்; யாருக்கும் தெரியாத என்னை, எனது எழுத்துக்களை அங்கீகரித்து, உற்சாகம் அளித்ததில் மிகப்பெரிய பங்கு இதற்குண்டு. சமையல் கட்டில் இருந்து வெளியே வர முடியாத எத்தனையோ பெண்களிடமும் மொபைல்போன் உள்ளது. கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கலாம்.கவிதை எந்த எதிர்பார்ப்புக்காகவும், வருமானத்திற்காகவும் வராது. நமக்குள் இருக்கும் இன்னொரு மொழி. அனைவருக்கும் வசப்படாது. சமூகத்தை நேசிக்கும், இயற்கையோடு இணைந்து பயணிப்பவர்களுக்கே உரித்தானது.கவிதை எந்த எதிர்பார்ப்புக்காகவும், வருமானத்திற்காகவும் வராது. அனைவருக்கும் வசப்படாது. சமூகத்தை நேசிக்கும், இயற்கையோடு இணைந்து பயணிப்பவர்களுக்கே உரித்தானது.சமூக வலைதளம், இன்றைய பெண்களுக்கு சிறந்த தளம்; யாருக்கும் தெரியாத என்னை, எனது எழுத்துக்களை அங்கீகரித்து, உற்சாகம் அளித்ததில் மிகப்பெரிய பங்கு இதற்குண்டு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X