வேலைவாய்ப்பு முகாம் 549 பேர் தேர்வு| Dinamalar

வேலைவாய்ப்பு முகாம் 549 பேர் தேர்வு

Added : செப் 11, 2021 | |
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில்நடந்த திறன் ஆள் சேர்ப்பு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில், 1,687 பேர் பங்கேற்றனர். இதில், 549 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து, காஞ்சிபுரம் பச்சையப்பன் பெண்கள் கல்லுாரியில், நேற்று, தனியார் வேலை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில்நடந்த திறன் ஆள் சேர்ப்பு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில், 1,687 பேர் பங்கேற்றனர்.

இதில், 549 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து, காஞ்சிபுரம் பச்சையப்பன் பெண்கள் கல்லுாரியில், நேற்று, தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.இந்த முகாமில், 40 தனியார் நிறுவனங்களை சேர்ந்த நிர்வாக அதிகாரிகள், 14 திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்றனர்.

அவரவர் கல்வி தகுதிகளுக்கு தகுந்த வேலை குறித்து, முகாமில் தெரிவிக்கப்பட்டது. இந்த முகாமில், காஞ்சிபுரம் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து, படித்த இளைஞர்கள் ஆண், பெண்கள் என, பலர் பங்கேற்றனர். முகாமில் 549 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X