ரோட்டில் சுற்றும் நாய்கள்: அச்சத்தில் பொதுமக்கள்

Added : செப் 11, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் -- செட்டிபாளையம் ரோட்டில், பல நுாற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில், ஏராளமான தெரு நாய்கள் முகாமிட்டுள்ளன.அப்பகுதியினர் கூறியதாவது:குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில், 25க்கும் அதிகமான தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. குறிப்பாக, வேட்டைக்காக பயன்படுத்தப்படும் நாயும்
 ரோட்டில் சுற்றும் நாய்கள்:  அச்சத்தில் பொதுமக்கள்

பல்லடம்:பல்லடம் -- செட்டிபாளையம் ரோட்டில், பல நுாற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில், ஏராளமான தெரு நாய்கள் முகாமிட்டுள்ளன.அப்பகுதியினர் கூறியதாவது:குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில், 25க்கும் அதிகமான தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. குறிப்பாக, வேட்டைக்காக பயன்படுத்தப்படும் நாயும் இவற்றுடன் சுற்றி வருகிறது.கூட்டமாக திரியும் நாய்களால் வெளியே செல்லவே பயமாக உள்ளது. இரவு நேரங்களில், தெருக்களில் முகாமிடும் நாய்கள், பெண்கள் சிறுவர்களை அச்சுறுத்தி வருகின்றன. குழந்தைகளும் அவ்வப்போது ரோட்டில் விளையாடும் சூழலில், தெரு நாய்களால் ஆபத்து உள்ளது.சமீப நாட்களாக, தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.எனவே, அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை பிடித்துச் செல்ல நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X