முன் விரோதத்தில் தாக்குதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முன் விரோதத்தில் தாக்குதல்

Added : செப் 11, 2021
Share
ஆர்.கே.பேட்டை : ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வழக்கில், ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய ராமாபுரம் காலனியைச் சேர்ந்தவர் நரசிம்மன் மகன் ரமேஷ், 42. இவர், கடந்த 7ம் தேதி, கடைவீதிக்கு நடந்து சென்று கொண்டுஇருந்தார்.அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த குமார் மகன்கள் பாண்டியன், 23, அஜித்குமார், 25, ஆகியோர் முன்விரோதம்

ஆர்.கே.பேட்டை : ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வழக்கில், ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய ராமாபுரம் காலனியைச் சேர்ந்தவர் நரசிம்மன் மகன் ரமேஷ், 42. இவர், கடந்த 7ம் தேதி, கடைவீதிக்கு நடந்து சென்று கொண்டுஇருந்தார்.அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த குமார் மகன்கள் பாண்டியன், 23, அஜித்குமார், 25, ஆகியோர் முன்விரோதம் காரணமாக,ரமேஷ் மீது தாக்குதல் நடத்தினர். இதில், ரமேஷ்காயம் அடைந்தார்.இதே போல், ரமேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் தாக்கியதாக, அஜித்குமாரும் புகார் அளித்துள்ளார். இரு தரப்பினரின் புகாரின்படி, ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பாண்டியன், அஜித்குமார், ரமேஷ், சுரேஷ், ரவி ஆகிய ஐந்து பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X